Connect with us

இதுக்கு மேல முடியாது..! – சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்..! – வி.ஜே. மகேஸ்வரி காட்டம்..!  

Vj Maheswari, விஜே மகேஸ்வரி

Actress | நடிகைகள்

இதுக்கு மேல முடியாது..! – சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்..! – வி.ஜே. மகேஸ்வரி காட்டம்..!  

சன் மியூசிக்கில் பிரபல தொகுப்பானியாக பணியாற்றி வந்தவர் வி.ஜே. மகேஸ்வரி பல்வேறு நேரலை நிகழ்ச்சிகளில் ரசிகர்களுடன் கலந்துரையாடி சினிமா ஹீரோ எங்கள் ரேஞ்சுக்கு பிரபலமானார்.

அதனை தொடர்ந்து சில திரைப்படங்களிலும் கூட ஹீரோயின் ஆகவும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் ரியல் எஸ்டேட் மற்றும் சிறுகுறு விளம்பர நிறுவனங்களின் விளம்பர படங்களிலும் நடித்து கல்லா கட்டியிருக்கிறார் விஜே மகேஸ்வரி.

இடையில் தன்னுடைய நண்பர் ஒருவரே காதலித்து திருமணம் செய்து கொண்ட விஜே மகேஸ்வரி ஒரு குழந்தைக்கு தாயுமானார். ஆனால் குழந்தை பிறந்த பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

சமீப காலமாக திரைப்பட வாய்ப்புகளுக்காக கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்த இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

கண்ணீர் வர வைத்த விஜே மகேஸ்வரி..

இதில் கலந்து கொண்ட விஜே மகேஸ்வரிக்கு ரசிகர் பட்டாளம் பெருகியது. மறுபக்கம் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை அதில் ஏற்படும் சிக்கல்கள் நான் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு வருகிறேன் என்றெல்லாம் தெளிவாக எடுத்து கூறி ரசிகர்களின் கண்களில் நீரை வரவழைத்தார்.

Vj Maheswari, விஜே மகேஸ்வரி

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் ஆறாவது சீசனில் பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன என்று தான் கூற வேண்டும்.

ஐந்து சீசன் பிக் பாஸ் முடிந்திருக்கிறது. ஆனால் இந்த சீசனில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெற்றியாளர் குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. பொதுவாக பிக் பாஸ் போட்டியில் யாரேனும் ஒரு வெற்றி பெற்றால் கடந்து விட்டு சென்று விடுவார்கள்.

பிக்பாஸ் விளையாட்டில் புகுந்த அரசியலு..

ஆனால் இந்த முறை அப்படி இல்லை என்று தான் கூற வேண்டும். காரணம் அரசியல் பின்புலம் கொண்ட ஒரு போட்டியாளர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அவர் பிரபல செய்தியாளரும் பத்திரிகையாளருமான விக்ரமன்.

இவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே இருந்த அரசியல் கட்சிகள் சில சில முன்னெடுப்புகளை நடத்தின. இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.

ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் அரசியல் தலையீடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கருத்துக்களை பதிவு செய்து வந்தனர் பொதுவான பிக்பாஸ் ரசிகர்கள். ஆனால், அந்த அரசியல் கட்சியின் முன்னெடுப்புக்கு எதிராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் முடிவுகள் வெளிவந்தன.

Vj Maheswari, விஜே மகேஸ்வரி

இறுதி போட்டியாளராக விக்ரமன் மற்றும் சீரியல் நடிகர் அசீம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சீரியல் நடிகர் அசீம் பிக் பாஸ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

அதிலிருந்து மிகப்பெரிய சர்ச்சியிகள் வெடித்தன. ஏனென்றால் பிக்பாஸ் மேடையில் வெற்றியாளர்களுடன் நிற்காமல் தோல்வியடைந்த விக்ரமின் தோல் மீது கை போட்டு நின்று கொண்டிருந்தார் கமல்ஹாசன்.

பொட்டிய மாத்திட்டாங்க..

இதனால் கமலஹாசனே விக்ரமன் தான் வெற்றி பெறுவார் என்று நினைத்திருக்கிறார். ஆனால், வெளியே இருக்கக்கூடிய சில நபர்களை வைத்து தவறான முறையில் வாக்குகளை செலுத்தி வெற்றி பெற்று விட்டார் அசீம் என்று வழக்கம் போல உருட்ட ஆரம்பித்தனர் விக்ரமனின் ஆதரவாளர்கள்.

Vj Maheswari, விஜே மகேஸ்வரி

பொதுவாக.. அந்த காலத்தில் நிஜ தேர்தலின் போது பொட்டியை மாத்திடாங்க.. என்று உருட்டுவார்கள். தற்காலத்தில், EVM-ஐ ஹேக் செய்து விட்டார்கள் என்று உருட்டுவார்கள். அதே ஃபார்முலாவை அசீமின் வெற்றிக்கு எதிராக பின்பற்றி Hotstar App-ஐ ஹேக் செய்து விட்டார் என்று உருட்ட ஆரம்பித்தனர்.

ஆனால், மறுப்பக்கம் பொதுவான பிக் பாஸ் ரசிகர்கள் இப்போ என்ன நடந்து போச்சு என்று இந்த புலம்பி புலம்பி கொண்டிருக்கிறார்கள். இந்த விளையாட்டு தோல்வியை கூட ஏற்றுக்கொள்ள முடியாத நீங்கள்.. இன்னமும் அறம் வெல்லும்.. அது வெல்லும்.. இது வெல்லும் என்று பிதற்றிக்கொண்டு சுற்றுகிறீர்கள்.

Vj Maheswari, விஜே மகேஸ்வரி

அப்படி என்றால் அசீம் வெற்றி பெற்றது அறம் இல்லை என்று கூறுகிறீர்களா..? என்றெல்லாம் பேசி வந்தனர். இந்நிலையில், விக்ரமனுக்கு ஆதரவாக VJ மகேஸ்வரி சில கருத்துக்களை பதிவு செய்தார்.

நீங்க ஜெயிச்சா மட்டும் தான் அறமா..?

இதனால் கடுப்பான அசீம் ரசிகர்கள் VJ மகேஸ்வரி-யை தரக்குறைவாக விமர்சிக்கும் விதமாக பதிவுகளை இணையத்தில் வெளியிட்டு வந்தனர். இதனால் கடுப்பான VJ மகேஸ்வரி இனிமேல் பொறுத்துக் கொள்ள முடியாது இது போன்ற பதிவுகளை தொடர்ந்து நான் பார்த்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருந்தார்.

Vj Maheswari, விஜே மகேஸ்வரி

அதனை தொடர்ந்து இந்த விவகாரம் தற்போது அடங்கி இருக்கிறது. இந்த சர்ச்சை தற்போது ஒரு வழியாக அடங்கி இருக்கிறது. மறுபக்கம், அறம் வெல்லும் என்று கூறுகிறார்கள். ஆனால், வேறு ஒருவர் வெற்றி பெற்றால்.. மீண்டும் அறம் வெல்லும் என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் இவர்கள் வெற்றி பெற்றால் மட்டும் தான் அறம் வென்றதாக அர்த்தம்.. மற்றவர்கள் வெற்றி பெற்றால் எது அறத்தின் கீழ் வராதா..? என்று கலாய்த்து வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top