Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

கிறுகிறுன்னு வருதே..! – நயன்தாரா – விக்னேஷ் சிவனின் மொத்த சொத்துமதிப்பு இத்தனை கோடியா..?

actress nayanthara

Actress | நடிகைகள்

கிறுகிறுன்னு வருதே..! – நயன்தாரா – விக்னேஷ் சிவனின் மொத்த சொத்துமதிப்பு இத்தனை கோடியா..?

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த நடிகை நயன்தாரா-வும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர் திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்திற்கு தேனிலவு கொண்டாட சென்ற இருவரும் தற்போது நாடு திரும்பியுள்ளனர்.

தேன்நிலவு கொண்டாட்டத்தின் போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தங்களுடைய இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து தங்களுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தினர்.

actress nayanthara

நாடு திரும்பிய நயன்தாரா நேராக ஷாருக்கான் நடிக்கும் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மும்பை சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்தை வைத்து இயக்க உள்ள AK62 படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

actress nayanthara

இந்நிலையில் கணவன் மனைவியாக இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அந்த வகையில் நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு மட்டும் 200 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. மட்டுமில்லாமல் இயக்குனர் விக்னேஷ் சிவன் சொத்து மதிப்பு 50 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என அதன்படி கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய் சொத்து மதிப்பும் இருக்கும் என விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

actress nayanthara

மேலும் நடிகை நயன்தாரா ஒரு படத்தில் நடிப்பதற்காக 5 முதல் 15 கோடி வரை சம்பளம் பெருவதாகவும் இயக்குனர் விக்னேஷ் சிவன் 1 முதல் 2 கோடி வரை சம்பளம் பெருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .இந்த விபரங்களை அறிந்த ரசிகர்கள் ஆத்தாடி என்று வாயை பிளந்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top