Actress | நடிகைகள்
பெண்கள் தைரியமாக முன்னேறவேண்டும் பிரபல நடிகை காஜல் அகர்வால் ட்வீட் !
தமிழ் தெலுங்கு என திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் காஜல் அகர்வால் தற்போது இந்தியன் திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசனுடன் நடித்து வருகிறார். சினிமாவில் காஜல் அகர்வாலுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது 2009ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான திரைப்படமான மகதீரா.
இந்த திரைப்படம் வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது விமர்சன ரீதியாகவும் நல்ல பாராட்டைப் பெற்றது அதன்பிறகுதான் காஜல்அகர்வால் முன்னணி நடிகையாக உருவாகினர். மேலும் அவர் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.
மகதீரா வெற்றியை தொடர்ந்து காஜல் அகர்வால் டார்லிங் பிருந்தாவனம் மிஸ்டர் பர்ஃபெக்ட் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார். இந்தப் படங்களில் அவரது நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் அவர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
மகளிர் தினத்தை ஒட்டி காஜல்அகர்வால் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பெண்கள் என்பவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்.அவர்கள் எந்தத் துறையாக இருந்தாலும் தான் தேர்ந்தெடுக்கும் துறையில் தைரியமாக முன்னேறி செல்ல வேண்டும். யாருக்கும் பயப்பட தேவையில்லை நமக்கு எது தேவையோ அதை அமைத்துக் கொள்ளும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது நமக்கு பிடித்த ஆடைகளை அணிந்து கொள்ளலாம்.
நமக்கு பிடித்த மொழியை பேசிக்கொள்ளலாம் யாருக்கும் பயந்து நீங்கள் உங்கள் தன்மானத்தை இழக்க வேண்டாம் உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, எல்லாப் பெண்களையும் கௌரவிக்க வேண்டும்.
வாழ்க்கையில் பெண்கள் தைரியமாக முன்னேற வேண்டும் தைரியம் இருந்தால் தான் ஆபத்து நேரங்களில் தன்னை காப்பாற்றி கொள்ள முடியும் என காஜல் அகர்வால் கூறியுள்ளார்
மேலும் காஜல் அகர்வால் குழந்தை பிறந்த மூன்று மாதங்களிலேயே உடலை மீண்டும் கட்டுக்கோப்பாக வைத்து நடிக்க வந்துவிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவருமே ஆச்சரியத்தில் உள்ளார்கள். உணவுக் கட்டுப்பாட்டிலும் சரி அன்றாட வாழ்விலும் சரி நாம் சரியான பழக்கவழக்கங்களை கைப்பிடித்தார்
கடைபிடித்தால் இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை குதிரை சவாரி வில்வித்தை சிலம்பம் நடைப்பயிற்சி ஆகியவற்றைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டதாகவும் அது தனக்கு நல்ல பலனை அளித்ததாகவும் காஜல் அகர்வால் கூறியுள்ளார்