விவகாரமான கேள்வி கேட்ட ரசிகர்.. வித்யாசமான ரிப்ளை கொடுத்த பூஜா ஹெக்டே..!

சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய நடிகை பூஜா ஹெக்டேவிடம், ஆடையில்லாமல் இருக்கும் புகைப்படத்தை பதிவிடுமாறு ஒருவர் கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.

பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். இந்நிலையில் இவர், நடிகர் சூர்யா, இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ள ‘அருவா ‘ படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ள, நடிகை பூஜா… ‘ஹெலோ ஹெலோ நான் தமிழ் படங்களில் நடிக்க முடிவெடுத்து விட்டேன் என்கிற முடிவிற்கு செல்லவேண்டாம். நான் இதுவரை தமிழ் படத்தில் நடிக்க கையெழுத்து இடவில்லை .

இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாகவும் கூறினார். தற்போது, விஜய்யின் பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்துவருகிறார். மேலும் இந்த வருடம் இன்னும் தமிழ் படத்தில் நடிப்பேன் என எதிர்பார்ப்பதாகவும் பூஜா கூறியுள்ளார். தற்போது பிரபாஸுடன் ராதே ஷ்யாம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார் பூஜா ஹெக்டே. அப்போது ரசிகர்கள் கேட்கும் புகைப்படங்களை பதிவிடுவதாக தெரிவித்திருந்தார்.

---- Advertisement ----

அதில் ரசிகர் ஒருவர் தங்களது உடையில்லாத புகைப்படத்தை பதிவிடுமாறு கேட்டிருந்தார். இதற்கு தனது கால்கள் மட்டும் தெரியும் வகையில் ஒரு புகைப்படத்தை பதிவிட்ட பூஜா ஹெக்டே “வெறும் கால்கள்” என குறிப்பிட்டு அவருக்கு நெத்தியடி பதில் கொடுத்தார்.

---- Advertisement ----