“அந்த நேரத்தில்.. என் கணவர்..” பிரியாமணி வேதனை..!

பெங்களூரு கர்நாடகாவை சேர்ந்தவராக இருந்தாலும் பிரியாமணி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கிறார்.

காரணம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு என்ற கேரக்டரில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

பருத்திவீரன் முத்தழகு:

இப்படத்தில் இவரின் நடிப்பு பிரம்மிக்க வைத்தது என்றே சொல்லலாம். அப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கொடுத்த பிரியாமணிக்கு கௌரவிக்கப்பட்டது.

ஆனால் அதற்கு முன்னரே இவர் 2004 ஆம் ஆண்டு கண்களால் கைது செய் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிவிட்டார்.

--Advertisement--

தொடர்ந்து அது ஒரு கனாக்காலம் அது உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வந்த அவருக்கு பருத்தி வீரன் திரைப்படம் நல்ல ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு குவியத் அவங்க மலைக்கோட்டை, தோட்டா,ஆறுமுகம் நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

இதனிடையே பிரியாமணி பீக்கில் இருந்தபோதே முஸ்தபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

காதல் திருமணம்:

இவர்கள் இருவரும் ஐபிஎல் போட்டியின் போது முதன்முதலாக சந்தித்தனர். அதன்பின் நட்பாக மாறி பின்னர் காதலிக்க துவங்கினார்கள்.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2016 ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி இவர்களின் நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பின்னர் ஒரு வருடம் கழித்து இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. அந்த சமயத்தில் இவர்களது திருமணம் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான விஷயமாக பார்க்கப்பட்டது.

காரணம் முஸ்தபா முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்பதாலும் பிரியாமணி இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதாலும் பெரும் சர்ச்சைகள் எழுந்தது.

கணவர் ஐஎஸ் தீவிரவாதியா?

இது குறித்து பிரியாமணி, “நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களை லவ் ஜிகாத் என்று ஏன் விமர்சிக்கிறீர்கள்?

இஸ்லாமியர்கள் எல்லோருமே ஐ எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களாகவும் ஜிகாத்துடன் ஒப்பிடவும் முடியாது என பிரியாமணி தெரிவித்திருந்தார்.

அது போன்ற சர்ச்சைக்குரிய சமயங்களில் தனது கணவர் தனக்கு மிகவும் ஆறுதலாக இருந்ததாக பேட்டி ஒன்றில் கூறி மிகவும் மனம் உருகி பேசி இருக்கிறார்.

பிரியாமணி வேதனை:

எங்களை குறித்தும் எங்கள் குறித்து வரும் இது சர்ச்சைகள் எங்களை மட்டும் பாதிக்காமல் ஒட்டுமொத்த குடும்பத்தையும் மிகப்பெரிய அளவில் பாதித்தது.

அந்த சமயத்தில் நானே உடைந்து போய் அழும் போது என் கணவர் எனக்கு ஆறுதலாக இருந்தார். என்ன பிரச்சனையாக இருந்தாலும் என்னை தாண்டி தான் உன்னை வந்து சேரும்.

நான் உன்னை கவலைப்பட விட மாட்டேன் என்று சொல்லி எனக்கு ஆறுதல் கூறினார். முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள்,

தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஆகவே எல்லோரும் இருந்துவிட முடியாது என்பதை இதன் மூலமாக தெளிவான கூறினார் .