Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

சீரியல் நடிகைக்கு நிஜ மாமியார் ஆனார் மெட்டி ஒலி சாந்தி..! ரிசப்ஷனில் அரங்கேறிய அதிர்ச்சி..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலி சீரியல் டிவியில் வெளி வருகிறது என்றாலே இல்லத்தரசிகள் எந்த வேலையும் செய்யாமல் இந்த சீரியலை பார்க்க அமர்ந்து விடுவார்கள்.

அந்த வகையில் இந்த சீரியலில் நடித்த சாந்தி தற்போது சக்திவேல் சீரியலில் நடித்து வரும் சந்தியாவை தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

மெட்டி ஒலி சாந்தி..

இதனை அடுத்து மகனின் ரிசப்ஷனில் சாந்தி மாஸ்டர் டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக ரசிகர்களின் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறது.

மெட்டி ஒலி சீரியலில் இடம் பிடித்த அம்மி அம்மி மிதித்து பாட்டை யாரும் எளிதில் மறக்க முடியாது. இந்த பாடலில் டான்ஸ் ஆடிய டான்ஸ் மாஸ்டர் சாந்தி அழகான நடனத்தை வெளிப்படுத்தி இருப்பார்.

---- Advertisement ----

இவரும் பல சீரியல்களில்  நடித்திருக்கிறார். அத்தோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சக்திவேல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் தமிழ் சீசன் ஆறில் போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார்.

சீரியல் நடிகைக்கு நிஜ மாமியார்..

பிக் பாஸ் போட்டியில் பங்கேற்ற சில வாரங்களிலேயே வெளியேறிய இவரை நினைத்து ரசிகர்கள் வேதனை அடைந்தார்கள். மேலும் ரசிகர்களின் மத்தியில் பெரும் செல்வாக்கை பெற்ற இவர் தற்போது சக்திவேல் சீரியலில் பூமர் மாமியாராக நடித்து வருகிறார்.

இவரது நடிப்பை பார்த்து பலரும் இவரை திட்டி வரக்கூடிய வேளையில் தன் சொந்த வாழ்க்கையில் தன்னுடைய தந்தையை சிறு வயதில் இழந்ததை அடுத்து குடும்ப பாரத்தை தன்னுடைய தலையில் போட்டுக்கொண்டு சமாளித்து இருக்கிறார்.

அது போலவே தன்னுடைய வாழ்க்கையிலும் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவர் தன்னை விட்டு விலகிய பிறகு மகனை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது தனது மகன் முரளிக்கு சக்திவேல் சீரியலில் சாந்தியாக நடிக்கும் ரீல் மருமகளை ரியல் மருமகளாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். இவர்களது எங்கேஜ்மென்ட் சில தினங்களுக்கு முன்பு நடந்தது.

ரிசப்ஷனில் அரங்கேறிய அதிர்ச்சி..

பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக நடைபெறக் கூடிய இந்த திருமணத்தில் மணமகன் முரளி மற்றும் மணமகள் சந்தியா ரிசப்ஷனில் அவருடைய நண்பர்கள் கலந்து கொண்ட போது பலரும் கிப்ட்டை தந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதற்குக் காரணம் அவர்கள் நண்பர்கள் மேடையில் கிப்ட் கொடுத்த போது நண்பர்கள் ஒரு பேனர் போல் ஒன்றை ரெடி செய்து இருக்கிறார்கள். அது தான் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதோடு ஆசாசிரியத்தையும் தந்துள்ளது.

இதற்கு காரணம் இந்த பேனரில் ஒரு பக்கத்தில் சந்தியா மறுபக்கத்தில் முரளி இருவரும் நின்று நடுவில் கிரிக்கெட் கப் இருப்பது போல ஆர்சிபி ஜெஸ்ஸியை போட்டு இருப்பது போன்று எடிட் செய்திருக்கிறார்கள்.

அத்தோடு அந்த பேனரில் வாழ்க்கை எவ்வளவு பின்னுக்கு தள்ளினாலும் ஆர் சி பி போல் அணியாக செயல்பட்டு முன்னேற வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இதனை அடுத்து எந்த விஷயம் இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

மேலும் நீங்கள் இந்த வீடியோவை பார்க்க விரும்பினால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதுமானது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top