Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

ரெண்டு பேர் ஏமாத்திட்டாங்க.. கடைசியா நீயுமாடா..? மூன்றவாதாக ஏமாந்து போன நடிகை சீதா வேதனை வீடியோ..!

திரைத்துறையில் ஜோடியாக நடிக்கும் பல நட்சத்திர ஜோடிகள் பின்னர் ரியல் லைஃபிலே காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

ஆனால், அவர்கள் எல்லோருக்கும் வாழ்க்கை சிறப்பானதாக அமைந்துவிடுவதே கிடையாது. அதில் சிலர் மட்டும் தான் அஜித் ஷாலினி போன்று எடுத்துக்காட்டாக சொல்லும் வகையில் சிறந்த ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள்.

நட்சத்திர ஜோடிகளின் வாழ்க்கை:

சில பேருக்கு வாழ்க்கை காதலிக்கும் போது இருப்பது போலவே திருமணம் செய்து கொள்ளும்போது இருப்பதில்லை..

இருவருக்கும் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் எத்தனை வருட வாழ்க்கையானாலும் பிரிந்து விட்டு தனியாக சென்றுவிடுகிறார்கள்.

1980களில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு 90 காலகட்டத்தில் மிகப்பெரிய நடிகையாக தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

---- Advertisement ----

பார்ப்பதற்கு நல்ல லட்சணமான தோற்றம் முக ஜாடையோடு குடும்ப பெண்ணாக குடும்ப பங்கான தோற்றத்திற்கு பக்காவாக பொருந்தும் நடிகை சீதாவை நடிகர் பார்த்திபன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சீதாவின் காதல் திருமணம்:

இவர்களது திருமணம் 1990 ஆம் ஆண்டு நடைபெற்றது. தமிழ் ,தெலுங்கு ,மலையாளம், உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார் நடிகை சீதா.

தமிழில் ஆண்பாவம், உன்னால் முடியும் தம்பி ,மருதுபாண்டி ,ஆயிரம் பூக்கள் மலரட்டும், பாரிஜாதம், புதிய பாதை உள்ளிட்ட படங்களை ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

புதிய பாதை படத்தில் நடித்த போதுதான் பார்த்திபனுடன் காதல் வயப்பட்டு பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பிறகு சீதாவுக்கு அபிநயா, கீர்த்தனா , ராக்கி என மூன்று குழந்தைகள் இருக்கும் போது பார்த்திபனை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

குழந்தைகள் பிறப்புக்கு பிறகு மார்க்கெட் குறைய நடிகை சீதா ஆதி, மதுர, வியாபாரி உள்ளிட்ட படங்களில் அம்மா கேரக்டர்களில் நடித்து வந்தார்.

சீதாவுடன் விவாகரத்து:

இதனிடையே சீதா நடிகர் பார்த்திபனை திடீரென விவாகரத்து செய்த பிரிந்து விட்டார். இதற்கான காரணம் பார்த்திபன் திரைப்படங்களை இயக்குவதிலும், நடிப்பதிலும் மிகவும் பிசியாக இருந்தாராம்.

தன்னை கவனிக்கவே இல்லை. குடும்பத்தை அவர் Care எடுத்து பார்த்துக்கவே இல்லை என்ற காரணத்தால் அவரை விவாகரத்து செய்ததாக சீதா கூறி இருந்தார்.

பார்த்திபனை விவாகரத்து செய்த சில வருடத்திலேயே சீரியல் நடிகர் ஆன சதீஷ் என்பவரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார்.

ஆனால் சதீஷும் அவருக்கு சரியாக வாழ்க்கை துணையாக அமையாததால் பின்னர் அவரையும் விவாகரத்து செய்துவிட்டார்.

இரண்டு பேரும் விவாகரத்து செய்த பிறகு மீண்டும் மனம் திருந்தி நான் பார்த்திபனுடன் வாழ விரும்புகிறேன் என சீதா பேட்டிகளில் கூற பார்த்திபனோ உடைந்த கண்ணாடி திரும்ப ஒட்ட வைக்க முடியாது.

அதனால் நான் மீண்டும் ஏற்றுக்கொள்வேன் என்ற எண்ணத்தில் இருக்கவேண்டாம் என கூறி சீதாவை ஒரேடியாக உதறி தள்ளிவிட்டார்.

மூன்றாவது நபரிடம் ஏமாற்றிய சீதா:

அதன் பிறகு சீதா தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார். youtube சேனல் ஒன்றை துவங்கி அதில் அவ்வப்போது அன்றாட வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது அதாவது மூன்றாவதாக ஒருவரிடம் ஏமாந்து போனேன் என சீதா கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், மூன்றாவதாக ஒருவரிடம் ஏமாந்து போயிருக்கிறார் நடிகை சீதா. அது வேறு எதுவும் கிடையாது. சக்கரவள்ளி கிழங்கிடம் தன நடிகை சீதா ஏமாந்து போயிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவானது, என் வாழ்க்கையில் வந்து இந்த சக்கர வள்ளி கிழங்கும் ஏமாற்றிவிட்டது.. நீயுமாடா..? என்று சக்கரவள்ளி கிழங்கை பார்த்து கேட்கிறார் நடிகை சீதா.

நிறைய சக்கரவள்ளி கிழங்குகளை எதிர்பார்த்து காத்திருந்த நடிகை சீதாவிற்கு இரண்டே இரண்டு கிழங்குகள் மட்டும்தான் அந்த சக்கர வள்ளி கிழங்கு செடி கொடுத்து இருக்கிறது.

இதனால் ஏமாற்றம் அடைந்த நடிகை சீதா நீயுமாடா என்னை வாழ்க்கையில் ஏமாத்திட்ட என்று அதனிடம் சலித்துக் கொள்ளும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top