சைடு பிசினசில் கல்லா கட்டும் ஹீரோயின்கள்.. துபாயில் தொழில் பண்ணும் நயன்.. – பலரும் அறிந்திடாத தகவல்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள சில நடிகைகள் சினிமாத்துறையை தாண்டி மற்ற துறையிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். நடிகைகள் தங்களுக்கு சொந்தமாக சில தொழில்களையும் செய்து வருகிறார்கள். அவ்வாறு நடிப்பைத் தாண்டி 6 நடிகைகள் செய்யும் தொழில்களை பார்க்கலாம்.

நயன்தாரா : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. அதுமட்டுமல்லாமல் நயன்தாரா தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்குபவர்களில் ஒருவர். இவர் சினிமாவை தாண்டி பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். சமீபத்தில் தி லிப் பாம் என்ற அழகு சாதன பொருட்கள் கம்பெனியைத் தொடங்கினார். இதுதவிர துபாயில் மசாலா கம்பெனி மற்றும் ஆயில் கம்பெனிகளில் முதலீடு செய்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் : தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கடந்த ஆண்டு வெளியான ரஜினியின் அண்ணாத்தா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கீர்த்தி சுரேஷ் பூமித்ரா என்ற அழகு சாதன பொருட்கள் கம்பெனியைத் தொடங்கியுள்ளார். தோல் பராமரிப்பு மற்றும் இயற்கை சார்ந்த அழகு பொருட்கள் அங்கு விற்கப்படுகின்றது.

வரலட்சுமி : தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடிப்பவர் வரலட்சுமி. இவர் கொரோனா லாக்டவுனின் போது சிறிதாக பேக்கிங் நிறுவனமான Life of PIE என்ற பெயரில் தொடங்கினார். அப்போதே கிட்டத்தட்ட 100 ஆர்டருக்கு மேல் முடிதற்கு நன்றி தெரிவித்தார். தற்போது அந்த தொழிலை பெரிதுபடுத்தி நடத்தி வருகிறார்.

அமலா பால் : தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமாகி மைனா, தெய்வத்திருமகள் போன்ற படங்களால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் ஹிமாலயா ஹெல்த் ப்ராடக்ட் மற்றும் யோகா சென்டர் கேரளாவில் நடத்தி வருகிறார். வாழ்வில் சில கஷ்டமான நாட்களில் அமலாபால் கேரளா சென்று யோகா செய்வது மற்றும் ஓய்வு எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சரண்யா பொன்வண்ணன் : தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகை சரண்யா பொன்வண்ணன். கதாநாயகி, குணச்சித்திர வேடம், அம்மா கதாபாத்திரம் என எதைக் கொடுத்தாலும் கச்சிதமாக நடிக்கக் கூடியவர். டிஸைனிங் ஸ்கூல் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி என்ற பேஷன் ஸ்கூலில் சரண்யாவே ஓய்வு நேரங்களில் மாணவிகளுக்கு பாடம் எடுத்துவருகிறார். அவருக்கு ஆடை வடிவமைப்பது மிகப் பிடித்த விஷயமாம்.

ராகுல் ப்ரீத் சிங் : கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்தவர் ராகுல் ப்ரீத்தி சிங். இவர் தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்து வருகிறார். ராகுல் ப்ரீத்தி சிங் F45 ஜிம்கள் வைத்திருக்கிறார். இவருக்கு ஹைதராபாத்தில் இரண்டு செயல்பாட்டு ஜிம்கள் மற்றும் விசாகப்பட்டினத்தில் ஒன்று சொந்தமாக உள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

மணிமேகலை தனது ஊடகப் பணியை துவங்கிய காலத்தில் மிகச்சிறந்த தொலைக்காட்சியை தொகுப்பாளினியாகவும் வீடியோ ஜாக்கியாகவும் திகழ்ந்தவர். இவர் கிட்டத்தட்ட 12 …