முத்து பட நடிகை சுபஸ்ரீ-யா இது..? – படு குண்டாகி அடையாளமே தெரியலையே..!

முத்து, ஜெண்டில்மேன், எங்க தம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சுபஸ்ரீ (Subhasree) இவர் நிறைய படங்களில் நடிக்காவிட்டாலும், ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர்.

பெரிய நடிகர்கள், பெரிய இயக்குநர்கள் படங்களில் நடித்தால், அது சின்ன ரோலாக இருந்தாலும், அது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுவிடுகிறது. அதனால்தான் பாரதிராஜா, மணிரத்னம், பாலசந்தர் போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க பலரும் விரும்புகின்றனர்.

அதே போல் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் சில காட்சிகளில் நடித்தாலும், அவர்களுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவிடுகிறது.

சுபஸ்ரீ
Subhasree

அந்த வகையில், கடந்த 1995ம் ஆண்டில் வெளிவந்த முத்து படத்தில் நடித்தவர் சுபாஸ்ரீ. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி – மீனா ஜோடியாக நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ‘தேன்மாவின் கொம்பத்து’ என்ற மலையாள படத்தின் ரீமேக் படமான இதில் நடிகர்கள் சரத்பாபு, ராதாரவி, ரகுவரன், வடிவேலு, பொன்னம்பலம் என பல முக்கிய நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்திருந்தனர்.

இதில், ஜமீன்தார் சரத்பாபுவின் மாமன் மகளாக, முறைப்பெண்ணாக பத்மினி என்ற கேரக்டரில், சுபாஸ்ரீ நடித்திருந்தார். இவருக்கு அடிக்கடி விக்கல் வரும் என்பதால், இந்த படத்தில் ‘கொக்கு சைவ கொக்கு’பாடல் காட்சியில், இவருக்கு விக்கல் எடுப்பது போன்ற காட்சியும் இடம்பெற்றது.

சுபஸ்ரீ
Subhasree

அதேபோல், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அதே காலகட்டத்தில் வெளியான ‘ஜெண்டில்மேன்’ படத்தில், சுபாஸ்ரீ, படத்தின் கதாநாயகி மதுபாலாவின் தங்கையாக நடித்திருப்பார். படத்தின் நாயகன் அர்ஜூன்- கவுண்டமணி கூட்டணியில், கொள்ளைக்காரர்களாக நடித்த இந்த படம், செம ஹிட் ஆனது.

இந்த படத்தில், அர்ஜூனை பிடிக்கும் போலீஸ் அதிகாரியின் மனைவியாக, சுபாஸ்ரீ நடித்திருப்பார். துவக்கத்தில், மாடர்ன் கேர்ள் ஆக அர்ஜூன் வீட்டில், பயங்கர லூட்டிக்கார பெண்ணாக, சூட்டிகையான ஒரு நடிப்பை தந்திருப்பார் சுபாஸ்ரீ.

எனவே, முத்து மற்றும் ஜெண்டில் மேன் என இரண்டு படங்களில் நடித்திருந்தாலும், இன்றும் பெயர் சொன்னவுடன் உடனே முகம் அடையாளத்துக்கு வரும் அளவுக்கு, சிறந்த நடிப்பை தந்தவர் சுபாஸ்ரீ. அதே போல் கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். கடந்த 1993ம் ஆண்டுகளில் நடிக்க வந்த இவர், சில ஆண்டுகளில் நடிப்புத்துறைக்கு முழுக்கு போட்டு விட்டு விலகிவிட்டார். 1997ம் ஆண்டுக்கு பிறகு, இவர் தமிழில் எந்த படங்களிலும் நடித்ததாக தெரியவில்லை.

சுபஸ்ரீ
Subhasree

ஆனால், இப்போதும் முத்து, ஜெண்டில் மேன் படங்களை டிவியில் பார்க்கும் தமிழ் சினிமா ரசிகர்கள், இப்போதும் சுபாஸ்ரீ நடித்துக்கொண்டு இருக்கிறாரா? என மனதுக்குள் கேள்வி எழுப்பிக்கொள்ளும் அளவுக்கு, ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைதான் சுபாஸ்ரீ.

இப்படி பல நடிகைகள், சில படங்களில் நடித்துவிட்டு, நிரந்தரமாக காணாமல் போய்விடுகின்றனர். நடிப்பு உலகிலும் இல்லாமல், பொது வாழ்விலும் கண்களுக்கு தட்டுப்படாமல் மாயமாகி விடுகின்றனர். அதனால், அவர்கள் நடித்த படங்களை பார்க்கும் ரசிகர்கள், அதை பார்த்தே மனதை ஆறுதல் படுத்திக்கொள்கின்றனர்.

சுபஸ்ரீ
Subhasree

ஆனால், பழைய நடிகைகளின் நிலைதான் இப்படி. இப்போது பீல்டில் உள்ள பல நடிகைகள், தங்களது மார்க்கெட் இழந்த பின்னாலும் இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தங்களை தொடர்ந்து அப்டேட் செய்து, ரசிகர்களுடன் தங்களது நடிகை – ரசிகன் உறவை, எவ்வித தடங்கலுமின்றி தொடர்கின்றனர். இல்லை என்றால், சீரியல் நடிகையாகி, தங்களது நடிப்பு சேவையை தொடர்கின்றனர்.

சினிமாவில் காண முடியாத சுபாஸ்ரீ, தற்போது ஒரு புகைப்படத்தில் காணப்பட்டு இருக்கிறார். சில பெண்களுடன் ஒருவராக இருக்கும் அவரை பார்த்து, ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர். ஏனென்றால், அம்மணி சினிமாவில் ஸ்லிம் ஆக இருந்தவர், இப்போது செம குண்டாக, காட்சியளிக்கிறார்., உண்மையிலேயே இது சுபாஸ்ரீ தானா? இப்படி குண்டாக இருக்கிறாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.