கேட்கக்கூடாத கேள்வியை கேட்ட கணவர்.. ஒரே வருடத்தில் விவாகரத்து செய்த பிரபல நடிகை..!

90-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் சுகன்யா. புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். ஆர்த்தி தேவியாக இருந்த இவரை சுகன்யாவாக மாற்றியவர் இயக்குனர் பாரதிராஜா தான்.

பின்னர், சின்ன கவுண்டர், கோட்டைவாசல், மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ் என நிறைய வெற்றிப் படங்களில் நடித்தார். அதோடு பொதிகை தொலைக்காட்சியில் பெப்ஸி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், சன் டிவி-யில் ஆனந்தம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை 2002-ல் ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட சுகன்யா, வெகு விரைவில் அதாவது 2003-ல் கணவரை பிரிந்து விவாகரத்து பெற்றார். அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற ஸ்ரீதரன் என்பவருக்கும் நியூஜெர்சியில் 17-4-2002-ல் திருமணம் நடைபெற்றது.

இதன்பின் 2003-ல் தமிழகத்துக்கு வந்த நடிகை சுகன்யா தனது கணவர் வீட்டுக்குத் திரும்பவில்லை. இந் நிலையில், விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஸ்ரீதரன் ஆஜராகாததை அடுத்து, சுகன்யாவுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.திருமணத்திற்கு பின் சுகன்யா ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

ஆனால், கணவருக்கோ சுகன்யா நடிப்பது பிடிக்கவில்லையாம், இதனால், திரைப்படம் மற்றும் டிவியில் நடிக்கக்கூடாது என்று அடுக்கடுக்கான கட்டுப்பாடுகளை போட்டுள்ளார். அதுமட்டும் இல்லாமல், கேட்க கூடாத கேள்விகளையும் கேட்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சுகன்யா அவரை விவாகரத்து செய்துள்ளார்.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …