அமைச்சரின் அரவணைப்பில் ஆறு மணி நடிகை..! – விடிய விடிய வேட்டை..! – சிக்கிய பரிதாபம்..!

அமைச்சர் ஒருவர் அரவணைப்பில் ஆறு மணி நடிகை கடந்த ஒரு ஆண்டு காலமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்.

சில திரைப்படங்களில் இரண்டாவது ஹீரோயினாகவும் சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்திருக்கும் அந்த நடிகை ஒரே ஆண்டில் சொகுசுக்கார் சொகுசு பங்களா என செட்டிலாகி இருக்கிறார்.

ஹீரோயினாக நடித்தால் கூட இந்த அளவுக்கு வசதி கிடைக்காது. எங்கிருந்து அம்மணிக்கு இவ்வளவு வசதிகள் என்று பலரும் மூக்கின் மேல் விரல் வைத்தார்கள்.

அமைச்சருடன் செழிப்பாக வாழ்ந்த்த அம்மணி ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிப்பதையே விட்டு விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தற்பொழுது உடற்பயிற்சி கூடம், அழகு நிலையங்களை தொடங்கி நடத்தி வருகிறார். அவர் நடத்தக்கூடிய உடற்பயிற்சி கூடங்கள் அழகு நிலையங்கள் அனைத்துமே அவருடைய சொந்த இடங்களாக இருக்கின்றது.

அந்த இடங்களை வாடைக்கு எடுக்க போனால் அட்வான்சே  லட்சங்களில் தான் வாங்குவார்கள். ஆனால், அந்த இடத்தில் சொந்தமாக மூன்று மாடி கொண்ட ஒரு காம்ளக்சையே விலைக்கு வாங்கியுள்ளார் என்றால் அம்மணியின் வருமானம் தான் என்ன..? அதற்கு வழி தான் என்ன..? என்று பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.

அதன் பிறகு தான் விவகாரம் தெரிய வந்திருக்கிறது. அமைச்சர் ஒருவருடன் மணமான நகரத்தில் தனியாக வசித்து வந்திருக்கிறார் அம்மணி. அமைச்சர் ஏற்கனவே திருமணம் ஆனவர் அவருடைய மனைவிக்கு தெரியாமல் தன்னுடைய குடும்பத்தை நடத்தி வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் மணமான நகரில் நடக்கும் பூத்துகளை அறிந்து கொண்ட தாய்குலம் நடிகையை தன்னுடைய ஆட்களை அனுப்பி மிரட்டி இருக்கிறார். குடும்பத்தின் மீது அளப்பரியா பாசம் கொண்ட அமைச்சர்.. சிற்றின்பத்திற்கு ஆசைப்பட்டு குடும்பத்தை இழந்து விடுவோமோ என பயந்து ஆறு மணி நடிகையிடம்.. மணமான நகரம் வேணாம்.. நீ மாங்கனி நகருக்கு போய் விடு.. இனிமேல் என் வழியில் வரவே கூடாது.. என்று பண மூட்டைகளை கொடுத்து அம்மணியை பைசல் செய்து அனுப்பி இருக்கிறார்.

தூக்க முடியாத அளவுக்கு பண மூட்டைகளை பார்த்ததும் சரி என கூறி விட்டு மூட்டையை அப்படியே மாங்கனி நகருக்கு தூக்கி வந்து தடபுடலாக செலவு செய்திருக்கிறார் அம்மணி.

ஆனாலும் எதிர்காலத்தின் மீது கொஞ்சமே உஷாராக இருந்திருக்கிறார். முன்னணி பிரபலங்கள் கூட வாங்க முடியாத இடத்தில் மூன்று மாடிகள் கொண்ட ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸை விலைக்கு வாங்கி இருக்கிறார் அம்மணி.

அதில் இரண்டாம் தளத்தில் தன்னுடைய அழகு நிலையத்தையும் மூன்றாம் தளத்தில் உடற்பயிற்சி கூடத்தையும் நடத்திக்கொண்டு தரைதளத்தை பிரபல வங்கி ஒன்றிற்கும் வாடகை விட்டுவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார் அம்மணி.

இப்படி ஒரே வருடத்தில் ஓஹோ என வாழ்க்கையை பெற்ற அம்மணி தற்பொழுது பெரும் சிக்கல் சிக்கி இருக்கிறார்.

சமீபகாலமாக அரசியல்வாதிகளின் ஊழலை தேடி தேடி அள்ளிப்போட்டுக்கொண்டிருகின்றது மேலிடம்… ஊழல் தடுப்பு அமைப்புகள் பலவும் பல்வேறு அமைச்சர்களை டார்கெட் செய்திருக்கின்றன.

அமைச்சர்கள் மட்டுமில்லாமல் அவர்களுடைய உதவியாளர்கள், உதவியாளர்களின் உறவினர்கள், அமைச்சர்களின் உறவினர்கள், அமைச்சர் வீட்டில் வேலை செய்பவர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் தன்னுடைய ஆக்டோபஸ் கரங்களால் சுருட்டிக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், அந்த லிஸ்டில் சிக்கி இருக்கிறார் ஆறு மணி நடிகை. எனவே கையில் இருக்கும் சொத்தை காப்பாற்றிக் கொள்ள தன்னால் முடிந்த முயற்சிகளை எடுத்து வருகிறாராம்.

அமைச்சரிடம் இது பற்றி கேட்பதற்கு போன் செய்தால் அவர் கொடுத்திருந்த தொலைபேசி எண் எப்போதுமே சுவிட்ச் ஆஃப் என்று தான் வருகிறதாம். சரி அவருடைய உதவியாளருக்கு அழைக்கலாம் என்றால் அந்த போன் நம்பரும் சுவிட்ச் ஆஃப் என்று வருகிறதாம்.

இதனால் ஆஃப் ஆகி கிடக்கிறார் அம்மணி. எப்போது துறை அதிகாரிகள் நம்மை நெருங்கி வருவார்களோ.. என்ற பீதியிலேயே கிடந்த அம்மணி.

இனிமேல் இங்கே இருந்தால் வேலைக்கு ஆகாது.. சில காலம் வெளிநாடுகளில் தஞ்சம் அசைந்து விட வேண்டியது தான் என பிரச்சனை முடிந்த பிறகு இங்கே வரலாம் என்று தன்னுடைய தாயை அழைத்துக் கொண்டு வெளிநாட்டில் இருக்கக்கூடிய தன்னுடைய மூத்த சகோதரியின் வீட்டிற்கு சென்று விட்டாராம்.

கண்ணாடியை திருப்புனா ஆட்டோ எப்படி ஓடும் என்பது போல வெளிநாடுகளில் சென்று விட்டால் பிரச்சனை எப்படி தீரும் என்று தப்பு கணக்கு போட்ட நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சும் என முனுமுனுக்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …