விருமன் படத்துல நடித்த அதிதி ஷங்கரா இது..? – நம்பவே முடியலையே..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 பிரமாண்ட இயக்குனர் என்றழைக்கப்படுகின்ற ஜென்டில்மேன் சங்கர் பற்றி எல்லோருக்கும் தெரியும் ஜீன்ஸ்  போன்ற வித்யாசமான படங்களையும் எந்திரன் போன்ற நினைக்க முடியாத படங்களையும் மக்களுக்காக உருவாக்கித் தந்த மாபெரும் இயக்குனர். இவரின் மகள் தான் அதிதி. இவர் தற்போது நடிகர் கார்த்தி நடித்த விருமன் படத்தில் நடித்து கலக்கி இருந்தார்.

 மேலும் விருமன் படத்தில் தன் நடிப்போடு நின்றுவிடாமல் ஒரு பாடலையும் இந்தப் படத்திற்காக அதிதி சங்கர் பாடியிருக்கிறார் எப்போதும் மிகவும் சுறுசுறுப்பாகவும் சூடாகவும் இருக்கக் கூடிய இவரை பலரும் தற்போது விரும்பி வருகிறார்கள் இவருடைய கள்ளம் கபடம் இல்லாத பேச்சு காமெடி சென்ஸ் இவற்றால் செட்டில் இவர் மிகவும் புகழ்பெற்று காணப்படுகிறார்.

 டாக்டர் படிப்பை முடித்துவிட்ட இவர் தற்போது திரையுலகில் கலக்கி வருகிறார் என்று தான் கூற வேண்டும் திரைப்படம் மட்டுமல்லாமல் தற்போது சென்னை சில்க் விளம்பரங்களிலும் இவர் நடித்து அசத்தி வருகிறார் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்  என்ற வாசகத்துக்கு ஏற்றபடி நடந்து கொள்கிறார்.

 சோசியல் மீடியாக்களில் மற்ற நடிகைகளைப் போல ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷாவின் ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் பார்த்து இவர் இளவரசியாக போட்டோ ஷூட் நடத்தி வைக்கிறார் அதுவும் இந்த போட்டோ ஷூட் நவராத்திரி காலகட்டத்தில் எடுக்கப்பட்டது என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

 மேலும் நவராத்திரியின் முதல் நாள் அன்று தான் இந்த போட்டோ ஷூட் செய்யப்பட்டதாக கூறியுள்ள நிலையில் அதைப் பார்க்கும் போது மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது இவருக்குள் ஒரு இயக்குனர் இருக்கிறாரோ என்ற கேள்வியை தூண்டி விட்டிருக்கிறது.

மேலும் தற்போது அடிதி சங்கர் சிவகார்த்திகேயனோடு இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் அவர் முற்றிலும் வேறுபட்டதாக மாறியிருக்கிறார் முதல் படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாக நடித்த இவர் இந்தப் படத்தில் மாடர்ன் உடை அணிந்து மாஸ் காட்டியிருக்கிறார். இப்போது இவரது ரசிகர்கள் இந்தப் படம் எப்போது வெளிவரும் அதை காண்பதற்கு ஆவலாக இருக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த ஊசி போட்டுக்கிட்டு இந்த கவர்ச்சி நடிகை நடிப்பார்.. பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட திடுக் தகவல்..!

தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும், போனாலும் நடிகை சில்க் ஸ்மிதாவுக்கான இடத்தை யாராலும் நெருங்க கூட முடியவில்லை …