மீண்டும் முதலில் இருந்தா? மறுபடியும் ரசிகர்களை நேரில் சந்திக்க வருகிறார் சூப்பர் ஸ்டார்!

சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் சின்ன குழந்தைகளும் சொல்லும். இதோ இவர் வந்துவிட்டார்… வந்துவிடுவார் …  அரசியலில் என்று ஆவலோடு எதிர்பார்த்த சமயங்களில் எல்லாம் இவர் நமக்கு கொடுத்தது என்னவோ கடுக்காய் தான்.

 தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க போவதாக அறிவித்த ரஜினி தற்போது என்ன முடிவில் இருக்கிறார். இவரது சகோதரர் எதைப்பற்றி கூற வருகிறார். எதற்காக  மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் . இந்தக் கேள்விகளுக்கு உண்மையான பதில் எப்படி கிடைக்கும் என்பது தெரியவில்லை.

 தற்போது புதிய படமான ஜெய்லர் படத்தில் நடிக்க ரஜினி இருப்பதால் அந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக அவர் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். இந்த வேளையில் இது போன்ற வார்த்தைகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட இவர் இப்படித்தான் பரபரப்பை ஏற்படுத்துவதோடு சரி என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

அந்த காலத்தில் ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வந்து மக்களுக்கு வேண்டிய நன்மைகளை நிச்சயமாக செய்வார் என்று ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல தமிழக மக்களின் மனதிலும் ஒரு அதீத நம்பிக்கை இருந்தது. அவர்களின் நம்பிக்கையை தகர்க்கும் விதத்தில் மூன்று முறை அவர் அரசியலிலிருந்து பின் வாங்கிய பின்பு இவர் அரசியல் அறவே ஒத்துவராது ஆன்மீகம் மட்டுமே  சரிவரும் என்று அனைவரும் அவர்களுக்குள்  சமாதானம் செய்து கொண்டார்கள்.

 இப்போது அறிவிக்கப்பட்டுள்ள அரசியல் ரீதியான சந்திப்பு எதற்கு என்ற கேள்வி குறி  ஒரு பக்கம் இருந்தாலும் சமீபத்தில் இவர் ஆளுநர் ரவியை சந்தித்ததில் எதற்கு என்ற கேள்வியை இப்போது ஏற்படுத்தியுள்ளது. ஒரு சமயம் அரசியல் கட்சி தொடங்குவதற்காக அல்லது கட்சியில் இணைவதற்காக  சந்தித்து இருக்கலாம் என்ற யூகங்கள் வந்துள்ளது.

இந்த சந்தேகங்களுக்கும் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இவரது சகோதரர் சத்யநாராயணா பேசுகையில் ரஜினி மீண்டும் அரசியல் வருவதற்கான வாய்ப்பை கடவுள் தான் அளிக்க வேண்டும். அது கடவுளின் கையில் உள்ளது என்று இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் ஆளுநரை சந்தித்து அன்பின் நிமித்தம் தான். தவிர அரசியல் நிமித்தம் அல்ல. அப்பாடா குழம்பியவர்களுக்கு ஒரு தெளிவை கொடுத்துட்டாங்க.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …