பிரபல இளம் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி திருமணம் குறித்த தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.
அவர் கூறியதாவது, நான் திருமணம் செய்து கொள்ளும் யோசனையில் கிடையாது. கண்டிப்பாக நான் திருமணம் செய்து கொள்ளவே மாட்டேன். ஆனால், எனக்கு என்று ஒரு ஆண் துணை வேண்டும்.,
அது திருமணத்தின் மூலம் தான் கிடைக்கும் என்று அந்த விதியும் இல்லை. ஆனால், நான் ஏன் திருமணத்தை வெறுக்கிறேன் என்பதற்கான காரணம் இருக்கிறது.
Read Also : “இதுக்கு பேசாம பிட்டு படத்துல நடிச்சுட்டு போயிடலாம்..” – காஜல் அகர்வால்-ஐ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!
நான் திருமணம் செய்து கொண்டு என் துணையோடு வசிக்கிறேன். அவருடன் சந்தோஷமாக வாழ்கிறேன் என்றால் எந்த பிரச்சினையும் கிடையாது. ஒருவேளை என்னால் அவருக்கு அமைதி இல்லை என்றாலோ..? அவரால் எனக்கு அமைதி இல்லை என்றாலோ..? எளிதாக பிரிந்து செல்ல முடியாது.
நான் ஏதாவது பிரச்சினை என்றால் உடனே பிரிந்து விட வேண்டும்.. என்ற அந்த கான்செப்ட்-க்குள் செல்லவில்லை. நாமும் அவருக்கு ஏற்ற மாதிரி விட்டுக்கொடுத்து போவோம்.. அவரும் நமக்கு ஏற்ற மாதிரி சில விஷயங்களில் விட்டுக்கொடுத்துப்போவார். அதுதான் கணவன் மனைவியாக வாழ்வது.
ஆனால் ஒரு கட்டத்தில் தன்னால் இவருடன் வாழவே முடியாது என்று நானோ அல்லது என்னுடன் தன்னால் வாழவே முடியாது என்று என்னுடைய கணவரோ யோசிக்கும் பட்சத்தில் இருவரும் எளிதாக பிரிந்து செல்ல முடியுமா..? என்றால் முடியாது.
அதற்கென்று நீதிமன்றங்கள் இருக்கிறது. வழக்கு தொடுக்க வேண்டும். முறையாக விவாகரத்து நடக்க வேண்டும். குறைந்தபட்சம் ஆறு மாதம் காத்திருக்க வேண்டும். நாங்கள் இருவரும் மனமொத்து பரஸ்பரம் பிரிக்கிறோம் என்று கூறினால் கூட ஆறு மாசம் காத்திருக்க வேண்டி இருக்கிறது.
Read Also : நிஜமாவே ட்ரெஸ் போட்டிருக்கீங்களா..? – ஒரு நிமிஷம் குப்புன்னு வேர்த்துடுச்சு.. – அதிர வைத்த நயன்தாரா..!
சட்டம், நீதிமன்றம், வழக்கு என அலைய வேண்டி இருக்கிறது. இந்த காரணங்களுக்காகவே நான் திருமணமே வேண்டாம் என்ற முடிவெடுத்திருக்கிறேன்.
ஆனால், எனக்கென ஒரு ஆண் துணை வேண்டும் என்று மட்டும் எனக்கு தெரியும். அது குறித்து பின் நாட்களில் யோசிப்பேன் என பேசி இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.