“என்னா ஷேப்பு… டஸ்க்கி குயின்..” – ஜகமே தந்திரம் படத்தில் அடக்க ஒடுக்கமா நடிச்ச பொண்ணா இது..?

மலையாளத்தில் நிவின் பாலி, பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி ( Aishwarya Lekshmi ) தற்போது தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

மலையாளம், தெலுங்கு, கன்னடம் திரையுலகில் ஏதேனும் ஒன்றில் அறிமுகமாகும் நாயகிகளின் அடுத்த இலக்கு தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைப்பதாகத்தான் இருக்கும்.நயன்தாரா முதல் லட்சுமி மேனன் வரை உதாரணங்கள் கூறலாம்.

மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் இதில் சேர்ந்து இருக்கிறார். நிவின்பாலி நடித்த ‘நிஜாண்டுகலுதே நாட்டில் ஓரிடவேளா’ படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா அதைத் தொடர்ந்து மாயநதி படத்தின் மூலம் மலையாள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

பகத் பாசிலுக்கு ஜோடியாக அவர் நடித்துவரும் வரதன் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இரண்டு மலையாளப் படங்களில் கவனம் செலுத்திவரும் இவர், தற்போது தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா லக்ஷ்மி.

ஏற்கனவே தமிழில் ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் இருக்கும் நிலையில் புதிதாக ஐஸ்வர்யா லட்சுமி இணைந்திருக்கிறார்.

இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தில் குடும்ப பாங்கினியாக அடக்க ஒடுக்கமாக நடித்த அம்மணி. கவுன் போன்ற உடையில் தன்னுடைய உடல் வாகு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சிதறடித்துள்ளார்.