சின்னத்திரை நடிகையும், தொகுப்பாளினியுமான ஐஸ்வர்யான் பிரபாகர் (Aishwarya Prabhakar) திருமணம் ஆகி 5 வருடத்திற்கு பின் கர்ப்பமாக இருந்த நிலையில், தனக்கு குழந்தை பிறந்த தகவலை, மிகவும் வித்தியாசமாக அறிவித்துள்ளார்.
ஒரு தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்களில் ஒருவர் ஐஸ்வர்யா. பின்னர்நடனக் கலைஞராகவும் மாடல் அழகியாகவும் மாறினார். இவர் திருமணம் ஆகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட நிலையில் தற்போது 5 வருடத்திற்கு பின், தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை சமீபத்தில் வெளியிட்டார்.
ஐஸ்வர்யா சன் குடும்பம் விருதுகள், அமுல் சூப்பர் குடும்பம் மற்றும் இசை திறமை ரியாலிட்டி ஷோ சன் சிங்கர் ஆகிய நிகழ்ச்சிகளை மிகவும் நேர்த்தியாக தொகுத்து வழங்கியவர்.
இதையும் படிங்க :”நான் மட்டும் தான் இருக்கேன்…” படுக்கையில் குப்புற படுத்துக்கொண்டு.. கீர்த்தி ஷெட்டி..- இணையத்தை திணறடிக்கும் போட்டோஸ்..!
மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான ‘மகாபாரதம்’ என்ற புராணத் தொடரில் திரௌபதி கதாபாத்திரத்திலும் நடித்தார். இதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியிலும் சில தொடர்கள் மற்றும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடனமாடி அசத்தினார்.
சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா, இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிந்து கொள்வார். இந்நிலையில் மகளிர் தினத்தில் கர்ப்பகால பெண்கள் ஆரோக்கியம் குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில், இந்த வீடியோவைப் பார்க்கும்போது நீங்கள் கொடுக்கும் அதிர்ச்சி/ஆச்சரியமான எதிர்வினையை முழுவதுமாக புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் நம் அனைவருக்கும் கர்ப்பம் பற்றிய சொந்த யோசனை உள்ளது.
செய்யகூடாதவை, கற்பிதங்கள், பயம், அனுமானங்கள் ஆகியவை இறுதியில் பல குழப்பங்களுக்கு வழிவகுக்கின்றன.நான் வித்தியாசமாக இல்லை…எனக்கும் இவை அனைத்தும் கலந்த உணர்வுகள் இருந்தன. ஆனால் நான் உண்மையில் கர்ப்பமாக இருந்தபோது நான் எவ்வளவு சந்தேகம் கொண்டிருந்தேன் என்பதை என்னால் அறிய முடிந்தது.
இதையும் படிங்க : அதுவே செக்ஸியா இருக்கு.. விட்ருங்க.. நான் வளர்ந்த A**-ஐ கொண்ட பெண்.. — ஓப்பனாக கூறிய இலியானா..!
எனது வாழ்க்கை முறையைத் தொடர என்னைத் தெளிவாக விளக்கி ஊக்கப்படுத்திய எனது மருத்துவருக்கு முதல் நன்றி !!நான் என் வாழ்நாள் முழுவதும் ஒரு நடனக் கலைஞராக இருந்தேன், நான் கர்ப்பமாக இருந்தபோது மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தேன்.
எனவே திடீரென்று எதுவும் செய்யாமல் படுக்கைக்கு மாறுவதில் அர்த்தமில்லை.எனவே எனது மருத்துவரின் ஆலோசனையை ஏற்று நடனம், உடற்பயிற்சி, வீட்டு வேலைகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டே இருந்தேன்.
எனக்கு ஆச்சரியமாக, நான் மேலே உள்ள அனைத்தையும் செய்யும் ஒவ்வொரு முறையும் அதிக ஆற்றலை உணர்ந்தேன். சுறுசுறுப்பான தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் IQ உள்ளது என்றும் ஆராய்ச்சி காட்டுகிறது.இது எனது முதல் குழந்தை, அதனால் நான் குறிப்புகள் வழங்குவதில் நிபுணன் இல்லை.
அனைத்து அழகான குட்டிப் பெண்கள், அழகான பெண்கள், சக்தி வாய்ந்த அம்மாக்கள், வலிமையான மனைவிகள், குறும்புக்கார சகோதரிகள் & புத்திசாலி பாட்டி அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்!” என கூறியுள்ளார்.