“உடலுறவில் இது ரொம்ப முக்கியம்…” – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய ஐஸ்வர்யா ராய்..!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.அவர்களுக்கு ஆராத்யா என்கிற மகள் இருக்கிறார். தன் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அதிகம் பேசாதவர் ஐஸ்வர்யா ராய்.

இந்நிலையில் அவர் தன் கணவருடன் சேர்ந்து கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் கூறியதாவது, நானும், அபிஷேக்கும் தினமும் சண்டை போடுவோம் என்றார்.அதற்கு அபிஷேக்கோ, சண்டை அல்ல அது கருத்து வேறுபாடுகள் என்று கூறலாம். சீரியஸாக எதுவும் இல்லை. ஆரோக்கியமானது தான். இல்லை என்றால் வாழ்க்கை போர் அடித்துவிடும். எப்பொழுது சண்டை போட்டாலும் நான் தான் முதலில் பேசுவேன்.

ஐஸ்வர்யா சமாதானம் செய்ய மாட்டார். ஆனால் சண்டை போட்டால் சமாதானம் ஆகாமல் தூங்கச் செல்லக் கூடாது என்று ஒரு விதிமுறை வைத்திருக்கிறோம். பாதி நேரம் ஆண்கள் தான் விட்டுக் கொடுக்கிறார்கள். எவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுக்கிறோமா அவ்வளவு நல்லது. உங்களிடம் ஆதாரம் இருந்தாலும் ஏற்க மாட்டார்கள் என்றார். தொடர்ந்து பேசிய ஐஸ்வர்யா ராய், உடலுறவு குறித்த தனது பார்வையை பற்றி ஓப்பனாக கூறினார். உறவுகள் என்பது சில நேரங்களில் உணர்ச்சிகள் ரீதியாக சோர்வடையலாம்.

மனதின் ஈடுபாடும் வேண்டும்

உறவில் ஈடுபட வேண்டும் என்ற ஒரே காரணதிற்காக ஏற்படும் உறவில் என்னால் ஈடுபட முடியாது. அது அற்பமானது என எண்ணுகிறேன்.என் உடல் மட்டுமில்லாமல் என்னுடைய மனநிலையும் அதற்கு ஒத்துப்போக வேண்டும். இன்று, பலரும் உடலுறவு பற்றி கவலை படுவதே இல்லை. ஆனால், நான் கவலைப்படுகிறேன்.

 

---- Advertisement ----

உடலுறவில் மனதின் ஈடுபாடு மிக முக்கியம். ஒவ்வொரு முறையும், அது இரண்டு உடல்களின் இணைவாக இருக்காமல் இரண்டு மனங்களில் இணைவாகவும் இருக்க வேண்டும். இது, என்னுடைய நியாயமான விருப்பம் தான். இந்த விஷயத்தில் நான் என்னை லக்கியாக உணர்கிறேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் அம்மணி.

---- Advertisement ----