என்ன ஆச்சு உங்களுக்கு இப்படி தப்பு தப்பா கேள்வி கேட்டா எப்படி ? – நடிகை ஐஸ்வர்யா ராய்!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் பற்றி உங்களிடம் சொல்ல வேண்டியதே இல்லை. அந்த அளவுக்கு என்னை விட பல விஷயங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இவர் அமிதாப்பச்சனின் மருமகள்  மட்டுமல்லாது  பல மொழிகளில் நடித்து வரக்கூடிய மிகவும் அற்புதமான நடிகை.

தற்போது இவர் பொன்னியின் செல்வனின்  பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார். இந்தப் படம்  கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவிய ஒரு படமாக வெளிவர உள்ளது. தமிழ்நாட்டை ஆண்ட தமிழ் மன்னர்களின் பெருமைகள் உலகளவில் பறைசாற்றும் வண்ணம் படமாக்கிய விதம் மற்றும் அதில் நடித்த நடிகர்களின் நடிப்பு பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை அந்த அளவுக்கு ஒரு தரமான படமாக  இருக்கும்.

 இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த ஐஸ்வர்யா ராயிடம் நிருபர்கள் கேள்வி கேட்ட வண்ணம் இருந்தார்கள். அதில் ஒரு நிருபர்  சற்றே தவறுதலான கேள்விகளை கேட்டிருப்பார் போல எனினும் ஐஸ்வர்யாராய் எந்த விதமான டென்ஷனும் அடையாமல் இப்படி தப்பு தப்பா கேள்வி கேட்டா நான் எப்படி பதில் சொல்ல முடியும் என்று மிகவும் கனிவாக பேசியது அனைவரையும் கவர்ந்தது.

அதோடு மட்டுமல்ல மணிரத்தினம் படத்தில் நடிப்பது மிகவும் பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருந்ததாகவும் கூறியிருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் தனது பட வரிசைகளில் மிகவும் முக்கியமானதாகவும்  மிகச்சிறந்த மைல்கல்லாக அமையும் என்று கூறியிருந்தார்.

 இந்த படத்துக்கு இசையமைத்து இருக்கக்கூடிய ஏ ஆர் ரகுமான் மற்றும் இதில் வேலை செய்த அனைத்து விதமான டெக்னீசியன் களுக்கும் அதீதத் திறமை இருக்கிறது. அவர்களால்தான் இந்த படம் ஒரு மிகப்பெரிய அந்தஸ்தை அடைந்திருக்கிறது.மேலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது என்று கூறினார்.

 எற்கனவே மணிரத்தினம் சாருடன் இணைந்து நான் ராவணன் படத்தில் நடித்துள்ளேன். அது போன்ற நிமிடங்களை என்னால் மறக்க முடியாது ஒவ்வொரு நிமிடங்களும் அவரோடு அவருடைய இயக்கத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது என்றார்.

அவர் கேள்வி கேட்ட அந்த நிருபரை பற்றி மிகவும் நகைச்சுவையோடு அவரும் சில குழப்பத்தில் இருப்பார் போலிருக்கிறது என்று கூறியது வைரலாக  பரவி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த ஊசி போட்டுக்கிட்டு இந்த கவர்ச்சி நடிகை நடிப்பார்.. பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட திடுக் தகவல்..!

தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும், போனாலும் நடிகை சில்க் ஸ்மிதாவுக்கான இடத்தை யாராலும் நெருங்க கூட முடியவில்லை …