கல்யாணம் நடக்கலனாலும்.. இது தான் எனக்கு முக்கியம்.. – வெளிப்படையாக கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணம் என்னவென்று பதில் அளித்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தற்போது 33 வயதாகும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இவருடைய திருமணம் குறித்து வதந்தியோ கிசுகிசுவோ கூட இதுவரை வந்ததில்லை என்பதை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இவரிடம் திருமணம் குறித்து எதிர்பார்ப்பு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இன்னும் என் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திருமணம் பற்றி நான் யோசித்து கூட பார்த்தது கிடையாது. கல்யாணம் நடக்கும் போது நடக்கும்.. அது நடக்க வேண்டும் என்று இருந்தால் நடந்துவிடும்.. நடக்காது என்றால் அது நடக்காது.

அது நடக்கும்போது நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன். கல்யாணம் நடக்கலன்னாலும்.. எனக்கு படங்கள்தான் முக்கியம்.. பட வாய்ப்புகளை பெறுவதில் தான் என்னுடைய கவனம் இருக்கிறது.

வாய்ப்பு பெற்ற படங்களில் எந்த அளவுக்கு என்னால் திறமையாக நடிக்க முடியும்.. எந்த அளவுக்கு என்ன என்னுடைய நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்று தான் பார்க்கிறேனே தவிர மற்றபடி தனிப்பட்ட விஷயங்கள் அதிக கவனம் செலுத்துவது கிடையாது.

திருமணம் குறித்து எந்த ஒரு யோசனையும் தற்போதைக்கு இல்லை. சினிமா தான் எனக்கு உயிர் எனவே என்னை மட்டுமில்லாமல் என்னுடைய உயிரான சினிமாவையும் சேர்ந்து நேசிக்கக் கூடிய என்னுடைய தன்மை அறிந்த ஒரு நபரை சந்திக்கும் வரை என்னுடைய திருமணம் பற்றிய யோசனை கூட எனக்கு கிடையாது என்று பேசி இருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ஒரு கையில் சாமி..! மறு கையில் ஈ.வெ.இராமசாமி..! வணங்கான் போஸ்டரால் வெடித்த சர்ச்சை..!

நடிகர் அருண் விஜய் இயக்குனர் பாலா கூட்டணியில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. முதலில் …