அஜித்தின் அடுத்த படத்தில் ஹீரோயின் யாருன்னு தெரியுமா..? – தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

அஜித் நடிப்பில் தற்போது வெளிவந்து சக்கை போடு போடும் படமான  துணிவு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 65 கோடி வசூலித்துள்ளது. மேலும் உலக அளவில் இதனுடைய வசூல் வேட்டை 100 கோடியை தாண்டி விட்டது.

 முழுக்க முழுக்க வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படமானது ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவி நிறுவனம் எடுத்துக் கொண்டுள்ளது.

 இது மட்டுமல்லாமல் பொங்கலுக்கு யார் வின்னர் என்று சமூக வலைத்தளங்களில் கிளம்பி இருக்கும் கேள்விக்குறியானது அது அஜித்தின் துணிவு திரைப்படமா? அல்லது விஜயின் வாரிசு திரைப்படமா? என்ற போட்டா போட்டியை கிளப்பி விட்டுள்ளது.

 இருதரப்பு ரசிகர்களும் அவர்களுக்கு எந்த படம் பிடித்துள்ளது என்பதை லைக் மற்றும் கமெண்ட்கள் மூலம் தெரிவித்து வரக்கூடிய நிலையில் அடுத்ததாக தல அஜித் நடிப்பில் வெளிவரக்கூடிய படம் தான் ஏகே 62 ஆகும்.

 இந்தப் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். மேலும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கான இசையை அனிருத் இசையமைக்க ஏற்கனவே இந்தப் படத்தை நெட் பிளக்ஸ் நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்கியுள்ளது.

 மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் உருவாகும் என்று தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை நெட்பிளக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 இதனைத் தொடர்ந்து ஏகே 62 என்ற ட்விட்டர் ஹாஸ்டல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை அடுத்து 13 ஆண்டுகள் இடைவேளைக்குப் பிறகு இவர்கள் இணைந்து இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“டேய்.. வலிக்குதுடா..”-ன்னு கடைசியா சொன்னார்.. – மனோபாலா-வின் இறுதி நிமிடங்கள்.!

இயக்குனர், குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டிருக்கும் மனோபாலா [Manobala] தமிழ் உள்ளிட்ட …