போட்றா வெடிய..! – செம்ம ஸ்கெட்ச்சு.. – AK62 படத்தில் வில்லன் யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்டுடும்..!

AK62 : வலிமை, நேர்கொண்டபார்வை போன்ற படங்களை எடுத்த வினோத்குமார் தற்போது அஜீத் குமாரை வைத்து துணிவு என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் அஜித்தின் AK62 படம் பற்றிய முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார்.

 காத்து வாக்குல இரண்டு காதல்  படத்தின் வெற்றிக்கு பின்னால் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் வெற்றிப்படமாக இதுதான் இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்.

 தற்போது ட்ரெண்டிங் ஆக உள்ள விஷயம் என்னவென்றால் கதாநாயகர்களை படத்தில் அறிமுகப் படுத்துவதை விட சிறந்த வில்லன்களை அறிமுகப்படுத்துவதில் திரையுலகில் ஒரு புது புரட்சியே நடந்து வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

 பேட்டை மாஸ்டர்  படத்தில் விஜய சேதுபதியை வில்லனாக அறிமுகப்படுத்தினார்கள். அதேபோல விக்ரம் படத்தில் சூர்யாவும் வில்லனாக வருவதுபோல தற்போது மவுசு வில்லனுக்கு அதிகரித்து வருகிறது. அதை கருத்தில் கொண்டு என்னவோ விக்னேஷ் சிவன் தற்போது தனது புதிய படத்திற்கு ஒரு புதிய உத்தியை கையாண்டு இருக்கிறார்.

அது விக்னேஷ் சிவன் தற்போது ஒரு பிரபலமான இயக்குனரை அஜித்துக்கு வில்லனாக இந்த படத்தில் போட இருக்கிறார். அதுவும் ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இந்த இயக்குனர் வேறுயாருமில்லை வெந்து தணிந்தது காடு, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற வெற்றி படங்களை கொடுத்து சிம்புவின் வாழ்க்கையில் ஒரு புது விளக்கை ஏற்றிய  கௌதம் வாசுதேவ் மேனன்.

இயக்குனரான கௌதம் மேனன் தற்போது சில படங்களில் நடித்து வருவதோடு சில முக்கிய முன்னணி நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் என்பது இதில் குறிப்பிடத்தக்கது.

 ஏறக்குறைய வில்லனாக இவர் உறுதிசெய்யப்பட்ட நிலையில் இந்த படத்தில் இவர் வெற்றியடைந்தால் தொடர்ந்து வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறியிருக்கிறார். எனவே கௌதம் வாசுதேவ மேனன், விக்னேஷ் சிவன், அஜித் இந்த மூவரின் காம்பினேஷனில் நிச்சயம் இந்த படம் நடிப்பதோடு மட்டுமல்லாமல் திரையுலகில் ஒரு புதிய சகாப்தத்தை படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …