உண்மையை மறுக்க முடியாமல் தள்ளாடும் உச்சகட்ட நட்சத்திரங்கள்..! – அஜித்குமார் vs தளபதி..!

 தமிழகத்தில் உச்சகட்ட நட்சத்திரங்களாக திகழக்கூடிய தல அஜித் மற்றும் தளபதி விஜய் தற்போது அவர்களது திரைப்படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார்கள். அதில் இப்போது வினோத் இயக்கத்தில் எடுக்கப்பட்டு வரும்  துணிவு படத்தின்   ஷூட்டிங்கில் பங்கேற்று உள்ளார். இந்த படத்தில் இவருக்கு மஞ்சுவாரியார் ஜோடியாக நடிக்கிறார்.

 இது போலவே தளபதி விஜய்யும் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில்  வெளிவர உள்ள இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா  நடித்திருக்கிறார்.

உச்ச கட்ட நட்சத்திரங்களான இவர்களின் படங்கள் பொங்கல் அன்று வெளிவரும் என்று தெரிகிறது. இந்தப் படத்தை பார்ப்பதற்காக இரண்டு தரப்பு ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.

 மேலும் இரண்டு படங்களும் இன்னும் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வராத நிலையில் இதன் டிஜிட்டல்  உரிமையை விற்று உள்ளது. இதற்கு காரணம் இரண்டு நடிகர்களுக்கும் அதிக அளவு ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை தரும் என்பதை நம்பி பல கோடி ரூபாய் முதலீடு செய்து எந்த படங்களை வாங்கி இருக்கிறார்கள்.

 இந்த இரண்டு நடிகர்களுமே அந்த குறிப்பிட்ட சேனலுக்கு இதன் உரிமையை விற்க விரும்பவில்லையாம். எனவே தயாரிப்பாளர்களிடம் அதை எப்படி விற்க வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்கள். ஆனால் தமிழ் திரையுலகை பொறுத்தவரை உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது நிறுவனம் தான் மிக அதிக அளவு படங்களை வெளியிட்டு வெற்றியும் கண்டு வருகிறது.

 உதாரணமாக தற்போது கமலஹாசன் நடித்து வெளிவந்த விக்ரம் படத்தை பெற்று மாபெரும் வசூலில் சாதனை புரிந்தது அதையடுத்து இந்தியன் 2 படத்தையும் இவர்களை வெளியிட உள்ள நிலையில் இவர்களைப் பகைத்துக்கொண்டு மற்றொரு நிறுவனத்திற்கு அதைக் கொடுத்தால் அது சரிவருமா என்று யோசித்து மிகவும் தயங்கிய பின் தான் அந்த சேனல்களுக்கு இதை விற்றுள்ளார்கள்.

 இதனைத்தொடர்ந்து வாரிசு படத்தை சன் டிவியும் துணிவு படத்தை கலைஞர் டிவியும் கைப்பற்றியுள்ளது. இதனை எடுத்துக் கூறிய பின்பு தான் உண்மையை உணர்ந்த அந்த இரண்டு உச்சகட்ட நட்சத்திரங்களும் செய்வது அறியாமல் அமைதியாக சென்று விட்டார்களாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …