17,851 அடி உயர புத்தர் சிலையை காண தானே தனியாக ஹெலிகாப்டர் ஓட்டிச்சென்றார்- தல அஜித்!

திரைப்படத் துறையில் எந்த ஒரு பின்னணியும்  இல்லாமல் தனி ஆளாக நின்று உழைத்து இன்று தல அஜித் என்று கூறும் அளவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் புகழையும் பெற்றிருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிகை ஷாலினியை திருமணம் செய்து கொண்டு நல்ல முறையில் வாழ்ந்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே.

காதல் கோட்டை படத்தின் மூலம் தமிழில் பிரபலமான நடிகர் அஜித் அதன் பின் வந்த படங்களின் மூலம் பெருவாரியான வெற்றியைப் பெற்றார். குறிப்பாக எஸ் ஜே சூரியா  இயக்கத்தில் வெளிவந்த வாலி படத்தில் இவர் பண்ணாத சேட்டைகளை இல்லை என்று கூறும் அளவுக்கு அனைவரின் நெஞ்சிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.

 அதன்பின் வந்த ரெட் படத்தில் தலைக்கு மொட்டை அடித்து நடித்திருந்த இவரை அனைவரும் அன்போடு தல என்று அழைக்க ஆரம்பித்தார்கள். திரை உலகில் தனக்கென்று ஒரு பாணியை பின்பற்றி வருகிறார் அதை நீங்கள் பில்லா படத்தில் பார்த்திருக்கலாம்.

 இப்போது அஜீத் வினோத் இயக்கத்தில் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். தற்போது படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு சில சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக வட மாநிலங்களில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.

 இந்த சுற்றுப்பயணத்தில் இவர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்திற்கு லைசன்ஸ் இல்லை என்று இடையில் ஒரு சில  கருத்துக்கள் பரவிய நிலையில் இவர்  தான் செல்லும் பகுதிகளில் இருந்து போட்டோக்கள், வீடியோக்கள் போன்றவற்றை தொடர்ந்து வெளியிட்டு வர அது மிக வைரலாக பரவி வருகிறது.

இப்போது இவர் லடாக் பகுதியில் உள்ள ஓர் இடத்தில் 17,851 அடி உயரத்தில் இருக்கக்கூடிய புத்தர் கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் எப்படி சென்ற தெரியுமா? பைக்கில் அல்ல .ஒரு ஹெலிகாப்டரில் தனியாக விமானப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

இந்த ஹெலிகாப்டரை இவரே தானாக ஓட்டுவது மாதிரியான போட்டோக்களும், வீடியோக்களும் தற்போது வலைதளங்களில் பரவி வருவதை பார்த்த அஜித் ரசிகர்கள் தல வேற லெவல் சொல்லுற மாதிரி கருத்துக்களை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

உடல் எடை கூடி.. ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் லட்சுமி மேனன்.. வைரலாகும் வீடியோ..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் லட்சுமிமேனன். இவர் முதல் படத்திலிருந்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து …