தல அஜீத்தால் தாமதம் ஆகிறதா ஏகே 61 திரைப்படம் – மனதுக்குள் உறும்பும் இயக்குனர் வினோத்!

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்துக்குப் பின்னால் அஜித்துடன் இணைந்து ஏகே 61 படத்தில் இயக்குனராக பணிபுரிந்து  வருபவர் வினோத் ஆவார்.

 இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இதில் அஜித் துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து வருகிறார்.

 படத்தின் படப்பிடிப்புகள் யாவும் ஹைதராபாத்தில் நடைபெற்று இருந்தது.மேலும் இந்த படத்தில் இன்னும் சில பகுதிகள் படம் பிடிக்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில் அஜித்குமார் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருப்பதால் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தளத்திற்கு வந்து  படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கான தேதி, நேரம் அதிகமாகி கொண்டே போகிறது.

 மேலும் அஜித் இந்த படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சிகளில் சில மாற்றங்கள் செய்ய  சொல்லியிருப்பதால் அதற்கான வேலைகளையும் டைரக்டர் வினோத் அவர்கள் செய்து முடித்து அதிக காத்துக்கொண்டிருக்கிறார்.

தல  அஜித் மேற்கொண்டிருக்கும் இந்த பைக் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால்  படப்பிடிப்பு ஏற்கனவே திட்டமிட்டபடி முடிந்திருக்க வேண்டிய நிலைமையில் இன்னும் முடியாமல் இருப்பது டைரக்டருக்கு நெருக்கடியை தந்துள்ளது.

 எனவே டைரக்டரின் அடுத்த படத்தை விஜய சேதுபதியை வைத்து இயக்குகிறார். இந்த படத்தை துவங்கி விடலாம். பின்னர் அஜித் வந்த பின்னால் அந்த படத்தை முடித்து விடலாம் என்று திட்டமிட்டிருந்த வினோத் இதுகுறித்து தயாரிப்பாளர்களை சந்தித்துப் பேசுகையில் முதலில் அஜித்படம் முடியட்டும். பிறகு இரண்டாவது படத்தை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருப்பார்கள்  போல தெரிகிறது.

 எனவே முதல் படத்தையும் முடிக்க முடியாமல் இரண்டாவது படத்தையும் துவங்க முடியாமல் கடுமையான நெருக்கடியில் டைரக்டர் வினோத் சிக்கித் தவிக்கிறார் என்று அனைவரும் கூறுகிறார்கள்.

இரண்டாவது படத்தை துவங்கியவுடன் அஜித் வந்துவிட்டால் இரண்டு படத்துக்கும் ஆகும் செலவை சமாளிப்பது மிகவும் சிரமம் என்பதால் டைரக்டர்கள் ஒரு படத்தை முடித்து விட்டு இன்னொரு படத்துக்கு போகலாம் என்று  கூறியிருப்பார்கள். என்றாலும் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி  டைரக்டர் வினோத் இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …