பிரபல இளம் சீரியல் நடிகை அக்ஷதா அஜித் ( Akshatha Ajit ) தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகின்றது.

டிஸ்னி+ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ஒளிபரப்பாகக்கூடிய கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் ஸ்டெல்லா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை அக்ஷதா அஜித்.
இவரை ரசிகர்கள் பலரும் செல்லமாக அக்சு, அச்சு குட்டி என்று இணையத்தில் அழைத்து வருகிறார்கள். சமீபகாலமாக இவருடைய ரசிகர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

தொடர்ந்து தொலைக்காட்சி சீரியல்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். கிட்டத்தட்ட இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது இன்றைய ரசிகர்கள் கணிக்கிறார்கள். கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி கோயம்புத்தூரில் பிறந்தவர் நடிகை அக்ஷதா அஜித்.

தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார். பொறியியல் படித்திருக்கும் இவர் தற்பொழுது இந்த சீரியலில் நடிப்பதற்காக மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார் என்று கூறப்படுகிறது.
மட்டுமில்லாமல் தொடர்ந்து தன்னுடைய சினிமா மற்றும் சீரியல் வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாகவும் தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை அதிகரிக்கும் விதமாகவும் இணைய பக்கங்களில் அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது புடவை சகிதமாக அழகு கொஞ்சம் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கனா காணும் காலங்கள் சீரியலில் பள்ளி சீருடையில் தோன்றும் அக்சு குட்டியா இது என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.
நாளுக்கு நாள் இவருடைய ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இவருடைய instagram பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை ஒரு சான்றாக இருக்கிறது.

தொடர்ந்து சினிமா மற்றும் சீரியல்களில் வெற்றி பெற்ற வெற்றிகரமான நடிகையாக வலம் வர வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறியிருக்கின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.