மீல் மேக்கர் உருளைக்கிழங்கு மசாலா செய்வது எப்படி

உங்கள் வீட்டில் உள்ளோர் மீல் மேக்கரை விரும்பி சாப்பிடுவார்களா? வீட்டில் சப்பாத்தி செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நாளில் மீல் மேக்கர் மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு மசாலா செய்யுங்கள். இது நிச்சயம் அற்புதமாக இருக்கும். குறிப்பாக இந்த மீல் மேக்கர் மசாலா பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.உங்களுக்கு மீல் மேக்கர் உருளைக்கிழங்கு மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் உருளைக்கிழங்கு மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* சோம்பு – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்
* பட்டை – 1 சிறிய துண்டு
* பிரியாணி இலை – 1
* வெங்காயம் – 1 (பெரியது, பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 2
* தக்காளி – 2 (அரைத்துக் கொள்ளவும்)
* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
* உருளைக்கிழங்கு – 1 (பெரியது, தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* மீல் மேக்கர் – 1 கப்
* பால் – 1/2 கப்
* கொத்தமல்லி – சிறிது
* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

*முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரை வடிகட்டிவிட்டு, மீல் மேக்கரில் உள்ள அதிகப்படியான நீரைப் பிழிந்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, சீரகம், பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து, சிறிது நீர் ஊற்றி கிளறி நன்கு எண்ணெய் பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் அரைத்த தக்காளியை சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, உருளைக்கிழங்கு வேகும் வரை மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* உருளைக்கிழங்கு வெந்ததும், அதில் மீல் மேக்கரை சேர்த்து, வேண்டுமானால் சிறிது நீரை ஊற்றி, மீண்டும் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் பால் ஊற்றி, கொத்தமல்லியை தூவி கிளறி இறக்கினால், சுவையான மீல் மேக்கர் உருளைக்கிழங்கு மசாலா தயார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல மலையாள திரைப்பட …