வருஷத்துக்கு ஒரு காரு.. ஆடம்பர பங்களா.. தற்போது கடனில் தத்தளிக்கிறேன் என புலம்பும் ஆல்யா மனசா..!

வருஷத்துக்கு ஒரு காரு.. ஆடம்பர பங்களா.. தற்போது கடனில் தத்தளிக்கிறேன் என புலம்பும் ஆலியா மனசா..!

சின்னத்திரையில் நடிக்கக்கூடிய நடிகர் மற்றும் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது தற்போது அதிக அளவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடர் மூலம் அறிமுகமான சஞ்சீவ் மற்றும் ஆலியா காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்களுக்கு தற்போது ஆசைக்கு ஒரு பெண் ஆஸ்திக்கு ஒரு மகன் என்று இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் அடிக்கடி இவர்களது குழந்தைகள் செய்யும் சேட்டைகளை வீடியோக்களாக ரீல்ஸ் வெளியிடுவார்கள்.

ஆலியா மனசா..

ராஜா ராணி சீரியலின் மூலம் மக்கள் கவனத்தை ஈர்த்த ஆலியா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார். அதுபோலவே இவரது கணவர் சஞ்சீவ் கயல் தொடரில் தனது சீரிய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.


சீரியல்களில் நடிப்பதோடு நின்று விடாமல் இவர்கள் இருவரும் தனியாக யூடியூப் சேனலை தொடங்கி அதில் பல வீடியோக்களை பதிவிட்டதோடு ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றிருக்கிறார்கள்.

இப்படி தங்களுடைய வேலையில் அதிக கவனத்தை கணவன் மனைவி இருவரும் செலுத்தி வரும் வேளையில் குடும்பத்தோடும் குழந்தைகளோடும் நேரத்தை செலவிட்டு சந்தோஷமாக இருக்கின்ற இவர்களைப் பார்த்து பலரும் ஆச்சரியப்படுவதுண்டு.

அது மட்டுமல்லாமல் சொந்த வீடு,கார் என வாங்கியதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் சம்பாதித்து சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக பலரும் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் இவர்கள் இருவரை போல சம்பாதித்து கோடீஸ்வரராக மாற லிக்கை கிளிக் செய்யுங்கள் என்று சோசியல் மீடியாவில் ஒரு விளம்பரம் வைரலாக வெளி வந்துவிட்டது.

இம்புட்டு கடனா..

இந்த விளம்பரத்தை பார்த்து ஆத்திரம் அடைந்த ஆலியா, சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருக்கிறார். அத்தோடு பேட்டி ஒன்றில் அவர் பேசிய போது சன் டிவி சீரியலில் கமிட்டான போது வணக்கம் தமிழகம் என்ற நிகழ்ச்சியில் பேச கூப்பிட்டு இருந்தார்கள்.


அந்த நிகழ்ச்சிக்கு போனேன். அது நடந்து ஒரு வருடத்திற்கு மேல் இருக்கும் இந்த நிகழ்ச்சிகள் தான் நான் ஏதோ ஒரு மார்க்கெட்டிங் முறையில் கணக்கில்லாமல் சம்பாதித்து இருப்பதாக என்னை பேட்டி எடுத்த அங்கரிடம் சொல்லி இருந்தார்கள்.

அந்த வழியில் அவரை சம்பாதிக்க சொல்லி தூண்டி விடவும், ஒரு செய்தி வந்தது. ஆனால் நான் அந்த நிகழ்ச்சிக்கு போனது என்னமோ உண்மை தான். அங்கு பத்தாயிரம் ரூபாய் கட்டினால் ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று சொன்னதெல்லாம் நம்ப வைத்து இருக்கிறார்கள். இதை அடுத்து தான் நான் கார், வீடு வாங்கினேன் என்று சோசியல் மீடியாவில் வெளி வந்து உள்ளது.

எனக்கு எவ்வளவு கடன் இருக்கிறது நான் எல்லாமே வாங்கியது இஎம்ஐ தான் என்பதை எவ்வளவு பேருக்கு தெரியும்.

புலம்பித் தவிக்கும் ஆலியா மனசா..

எங்களால் கடன் வாங்க முடிந்தால் திரும்ப கட்ட முடியும் என்ற நம்பிக்கையும் சக்தியும் இருப்பதால்தான் கடன் வாங்குகிறேன். எல்லா கடனுக்கும் உள்ள ரெகார்ட் சரியாக உள்ளது. குறுக்க வழியில் எதையும் சம்பாதித்து கோடீஸ்வரி ஆகிவிடவில்லை.


எனவே என்னைப் பற்றி தவறான செய்தி வந்த பத்திரிக்கையில் போலி வகையில் வந்தது. எனவே தான் புகார் செய்தேன்.

இந்த தகவல் வெளிவந்த சமயத்தில் நான் வெளிநாட்டிலிருந்து அப்போது சில நண்பர்கள் இந்த செய்தியை நிஜமான நம்பி என்னிடம் எப்படி சம்பாதிக்க வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு பிறகு தான் நான் உஷாரா ஆகி போலீசில் கம்பிளைன்ட் கொடுத்தேன்.

இந்த விளம்பரத்தை பார்த்து எத்தனை பேர் ஏமாந்தார்கள் என்று எனக்குத் தெரியாது எனக் கூறியதோடு இவ்வளவு கடன் உள்ளது என்று புலம்பித் தள்ளி இருக்கிறார்.