ராஜா ராணி தொடர் நாயகி ஆல்யா மானசா மீண்டும் ரீ-என்ட்ரி தர கடுமையான பயிற்சியில் ஈடுபடுகிறாரா?

விஜய் டிவியில் மிகவும் புகழ் பெற்ற தொடராக ராஜா ராணி தொடர் இருந்தது இந்த தொடரில் நடித்த ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதலின் காரணமாக இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

 ஆலியா கர்ப்பம் தரித்த காரணத்தினால் சீரியலில் இருந்து விலகியிருந்தார் தற்போது இவருக்கு இரண்டாவது குழந்தையும் பிறந்து விட்டது இதையடுத்து மீண்டும் இவர் சின்னத்திரையில் ரீ என்டரி கொடுப்பதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம்.

 இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்து 6 மாதங்கள் ஆன நிலையில் விஜய் டிவியை விட்டு விட்டு சன் டிவிக்கு வந்து இருப்பதாகவும் இதில் ஒரு புதிய சீரியலில் நடிப்பதற்காக தான் இப்போது தனது உடல் எடையை குறைப்பதற்கு முற்பட்டிருக்கிறார் என்றும் செய்திகள் தெரிகிறது.

சீரியலில் இருந்து விலகி இருந்த காலகட்டத்தில் இவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அதை பதிவு செய்து வந்திருக்கிறார் அந்த பதிவிற்கு ஏகப்பட்ட அழைப்புகள் மற்றும் கமெண்ட்கள் கிடைத்திருக்கிறது.

இதில் அதிகமாக இவர் மகளோடு அடித்த லூட்டிகளை மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற போது எடுத்த வீடியோக்களையும் ரசிகர்கள் அதிகளவு விரும்பி பார்த்திருக்கிறார்கள்.

அதை அடுத்து இவரின் கணவரான சஞ்சீவ்  சன் டிவியில் கயல் என்ற சீரியலில் நடித்து வருகிறார். அதே சீரியலில் இவர் மற்றொரு கேரக்டர் செய்வாரோ என்று தோன்றுகிறது. இப்போது அதற்காக எடுத்துக் கொண்டிருக்கின்ற பயிற்சிகளுக்கான புகைப்படங்கள் அனைத்தும் வலைதளங்களில் பரவி வருகிறது.

மேலும் ஏற்கனவே சஞ்சீவ் ஆல்யாவிற்கு என்று தனியாக ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது இவர்கள் மிகவும் ஆர்வமாக ஆல்யா எப்போது நடிக்க வருவார் என்பது போன்ற கேள்விகளையும் கமெண்ட் களையும் பதிவு செய்து வருகிறார்கள்.

மிக விரைவில் தொலைக்காட்சித் தொடருக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் ஆல்யாவை அவர்கள் நட்பு வட்டாரம் வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …