கடந்த 2001 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்தவர் அமலா ஷாஜி இணைய பக்கங்களில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு மிகப்பெரிய பிரபலமாக இருக்கிறார்.
பல்வேறு முன்னணி நடிகைகளை காட்டிலும் அதிகப்படியான இன்ஸ்டாகிராம் பாலோவர்களை கொண்டிருக்கிறார் நடிகை அமலா ஷாஜி.
கிட்டத்தட்ட 40 லட்சம் ரசிகர்கள் இவருடைய instagram பக்கத்தை பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.
ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு வித்தியாசமான முகபாவனைகளை வெளிப்படுத்தி ரசிகர்களை கவருவது என இன்ஸ்டாகிராம் குயின் என்று அழைக்கப்படுகிறார்.
கடைத்திறப்பு விழாக்களில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் அளவுக்கு அம்மணிக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
சமீபத்தில் மலையாளம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல்களை வெளியானது.
அதன் பிறகு youtubee TTF வாசன் நடித்துக் கொண்டிருக்கும் மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்தில் ஒரு ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இவர் குறித்த ஹாட்டான தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.
நடிகர் ஜெய் நயன்தாரா ஜோடியாக நடிக்க உள்ள புதிய திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் இளமைக்கால கதாபாத்திரத்தில் அமலா ஷாஜி நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
படக்குழு தரப்பில் இருந்தோ அமலா ஷாஜி தரப்பில் இருந்தோ எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் இது குறித்து வெளியாகவில்லை என்றாலும் ஊடகங்களில் இந்த தகவல்கள் வைரலாகி கொண்டிருக்கிறது.
TTF வாசனுக்கு அமலா ஷாஜி ஹீரோயினாக நடிக்கிறார் என்ற போதே ஷாக்கான ரசிகர்கள் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக அமலா ஷாஜி நடிக்கிறார் என்றதும் திகைத்து போய் உள்ளனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.