“ஒரிஜினல் நாட்டுகட்ட.. – பர்மா தேக்கு…” – ஆளை மயக்கும் அமலாபால்.. வைரலாகும் நச் போட்டோஸ்..!

சினிமாவில் அறிமுகமான காலம் தொட்டு தற்பொழுது வரை சர்ச்சைக்கும் பரபரப்புக்கும் கொஞ்சம் கூட பஞ்சம் இல்லாதவர் நடிகை அமலாபால். தன்னுடைய சினிமா வாழ்க்கையாக இருக்கட்டும் தன்னுடைய சொந்த வாழ்க்கையாக இருக்கும் இரண்டிலுமே பல சர்ச்சைகளை பல சர்ச்சையான விஷயங்களை சந்தித்திருக்கிறார்.

சினிமாவில் தற்போது வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் சொந்தமாக வெப்சீரிஸ் தயாரிக்கிறார் அல்லது வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். வெப்சீரிஸ்களில் கிளாமரை கொஞ்சம் தூக்கலாகவே காட்டுகிறார் அம்மணி.

பட வாய்ப்புக்காக காத்திருக்கும் அமலாபால் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்து வரும் இவர் தன்னுடைய அதிரடியான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கடவார் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அறிமுகமான முதல் திரைப்படமான சிந்து சமவெளி திரைப்படத்தில் மிகப்பெரிய சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தொடர்ந்து மைனா, தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக முன்னேறிய நடிகை அமலாபால் தலைவா பட இயக்குனர் A L விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அவருடன் சேர்ந்து வாழ்ந்த நடிகை அமலாபால் ஒரு கட்டத்தில் அவரை பிரிவதாக அறிக்கை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இவர்களுடைய திருமணம் இரண்டு ஆண்டுகளில் விவாகரத்தில் முடிந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது வெப்சீரிஸில் கவனம் செலுத்தி வரும் இவர் அடிக்கடி தன் பக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது கலர்கலரான பிரிண்ட் செய்யப்பட்ட உடையணிந்து கொண்டு தன்னுடைய இடுப்பழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த உடையில் இருக்கும் வண்ணங்களை போல என்னுடைய வாழ்க்கையிலும் வண்ணங்களை சேர்க்க விரும்புவதாக கூறி இருக்கிறார் நடிகை அமலா பால்.