தமிழில் பைரவா திரைப்படத்தில் கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை அம்மு அபிராமி.
அதனை தொடர்ந்து என் ஆளோட செருப்பை காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
ஆனால் ராட்சசன் திரைப்படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது.
இந்த திரைப்படத்தின் மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் அம்மு அபிராமி என்று பிரபலமானார் அம்மணி. அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இடையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் இவர் தற்போது கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் நீங்கள் நடிக்கக்கூடிய படங்கள் அனைத்திலும் உங்கள் கதாபாத்திரம் இறந்து விடுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.
இதைப்பற்றி உங்களுடைய பார்வை என்ன..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அம்மா அபிராமி வேதனையாக தான் இருக்கிறது. ஆனால், என்னை இந்த அளவுக்கு ரசிகர்கள் கவனிக்கிறார்கள் என்று நினைக்கும் போது ஜாலியாக இருக்கிறது.
என்னுடைய கதாபாத்திரம் கிளைமாக்ஸ் வரை உயிரோடு இருக்குமா..? இல்லையா..? என்பதை கேட்டுக் கொண்டிருந்தால் படத்தில் நடிக்க முடியுமா..? பட வாய்ப்பு வேணும்ல..! அதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டு நடித்து வருகின்றேன்.
ஒரு நடிகையாக இயக்குனர் கேட்பதை செய்ய வேண்டியது என்னுடைய கடமை என்று கூறியிருக்கிறார் அம்மு அபிராமி.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.