அசுரன் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமாக இருக்கும் நடிகை அம்மு அபிராமி தற்பொழுது குதுகலம் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக குக் வித் கோமாளி புகழ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த படத்தை இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன் என்பவர் இயக்குகிறார்.
இவர் இயக்குனர் துரை செந்தில்குமார் அவர்களின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. காக்கி சட்டை, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் நடிகை அபிராமி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பைரவா படத்தில் மருத்துவக் கல்லூரி மாணவியாக சில காட்சிகளில் தோன்றி இருந்தார்.
அதன் பிறகு என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, தானாசேர்ந்தகூட்டம், ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். ராட்சசன் திரைப்படம் இவருக்கு நல்ல பிரபலத்தை பெற்றுக் கொடுத்தது.
இந்த இந்த படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அபிராமி. அதன் பிறகு தன்னுடைய இந்த படம் வெளியான பிறகு தன்னுடைய பெயரை அம்மு அபிராமி என்று மாற்றிக் கொண்டார்.
இவருடைய திரை பெயராக தற்போது வரை அம்மு அபிராமி என்ற பெயரை நீடித்து வருகிறது. தற்போது கிட்டத்தட்ட எட்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகை அபிராமி.
அந்தவகையில் கோலிசோடா 1.5, குதூகலம், பெண்டுலம், கண்ணகி, கனவு மெய்ப்பட, யார் இவர்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் தொலைக்காட்சியில் நடைபெற்ற தமிழ் பேசு தங்கக் காசு என்ற போட்டியில் கலந்து கொண்ட இவர் அந்த போட்டியில் வெற்றி பெற்று தங்க காசை வெற்றி பெற்றார்.
2022ஆம் ஆண்டு குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 2வது இரண்டாவது ரன்னராக தேர்வானார். இந்நிலையில் சமீபகாலமாக தன்னுடைய கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ள அம்மு அபிராமி கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.