கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பம்.. குழந்தையை கொடுத்து விட்டு கம்பி நீட்டிய காதலன்.. எமி ஜாக்சன் பரிதாப நிலை..!

தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன் தொடர்ந்து விக்ரமுடன் நடிகர் விஜயுடன் தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக இருந்த நடிகை எமிஜாக்சன் தன்னுடைய காதலனுடன் சேர்ந்து திருமணத்திற்கு முன்பு ஒரு குழந்தைக்கு தாயானார்.

குழந்தை பிறந்த பின்பு நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறிவந்தார். இவருடைய வளைகாப்பு நிகழ்ச்சியில் ஒரு பெரிய பொருட்செலவில் நடத்தப்பட்டது.

ஆனால் இவருடைய காதலன் குழந்தை பிறந்த பிறகு எமிஜாக்சன் உடன் இருந்த உறவை துண்டித்துக் கொண்டு அவரை பிரிந்து சென்று விட்டார். நடிகை எமி ஜாக்சனும் அவருடைய காதலனும் ஏதோ நீண்ட நாள் காதலர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தான் எமிஜாக்சனும் அவரது காதலனும் காதலிக்கவே தொடங்கி இருகிறார்கள். உடனே காதலை ஏற்றுக் கொண்ட நடிகை எமிஜாக்சன். அதே வருடம் செப்டம்பர் மாதம் ஒரு குழந்தைக்கு தாயானார்.

அப்படி என்ன அவசரம் வந்தது.. குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் என்று தெரியவில்லை. கடந்த 2001ஆம் ஆண்டு எமி ஜாக்சன்-ஐயும் தன்னுடைய குழந்தையையும் அம்போவென விட்டுவிட்டு அவளுடைய காதலன் கம்பி நீட்டிவிட்டார்.

இவருடைய பிரிவுக்கு இதுதான் காரணம் என்று எதுவும் சொல்லப்படவில்லை. பல்வேறு காரணங்கள் இருப்பதாக தெரிகின்றது. முதல் கட்டமாக காதலனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கினார் நடிகை எமி ஜாக்சன்.

அதன் பிறகு இருவரும் பிரிந்து விட்டார்கள் என்ற தகவல் இணையத்தில் வைரல் ஆனது. தற்போது சிங்கிள் மதராக தன்னுடைய குழந்தையை வளர்த்து வருகிறார் எமி ஜாக்சன்.

மட்டுமில்லாமல் தன்னுடைய தாயுடன் தற்பொழுது வசித்து வருகிறார். தற்போது, தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஒண்ணுமே புரியலே உலகத்திலே.. என்னமோ நடக்குது… மர்மமா இருக்குது..!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …