தமிழ் திரையுலகில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பேதுணை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அனகா. இதை தொடர்ந்து இவர் சந்தானத்துடன் இணைந்து டிக்கிலோனா படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் இடம்பெற்ற ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடலுக்கு அனகா அசத்தலாக நடனமாடியிருந்தார். இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் செம வைரலானது.இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய அனகா, ‘நான் இன்ஜினியரிங் படித்துள்ளேன். சில வருடங்கள் வேலைக்கு சென்றேன்.
வேலை நேரம் போக மீதி நேரங்களில் சினிமாவில் வாய்ப்பு தேடினேன். என் கலைப்பயணம் இப்படிதான் தொடங்கியது. நட்பே துணை படத்தில் நடிகையாக அறிமுகமானேன்.சமீபத்தில் வெளியான டிக்கிலோனா படத்தில் நான் ஆடிய நடனம் வைரலானது. தற்போது மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் பீஷ்ம பர்வம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளேன்.
தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பேன்’ என கூறிகிறார் அம்மணி. வெறுமனவே பட வாய்ப்பு தேடுகிறேன் என்றில்லாமல் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை அதிர வைக்கிறார் அம்மணி.
அந்த வகையில்,தற்போது படு சூடான கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.