இந்த வயசுலயும் இப்படியா..? நம்பவே முடியலையே.. – “அன்பறிவு” பட நடிகை புகைப்படங்கள்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

மலையாள நடிகையான ஆஷா சரத் ( Asha Sharath ) திரிஷியம் படத்தில் நடித்ததத்தன் மூலம் பிற மொழி ரசிகர்களிடம் பிரபலமானார். இப்படத்தில் போலீஸ் உயர் அதிகாரியாக நடித்த ஆஷா சரத்தின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தப்படம் தமிழ் பாபநாசம் என்ற பெயரில் கமல் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வெளியான நிலையில் இந்த படத்திலும் ஆசா சரத் நடித்திருந்தார். மலையாளத்தை போலவே தமிழிலும் இவர் நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தை தொடர்ந்து இவர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள ‘அன்பறிவு’ படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை ஆஷா ஷரத் தனது நடிப்புதிறமை மூலம் தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்துள்ளார், வெகு இயல்பான நடிப்பு என்பது, அவரது பலமாக மாறியுள்ளது.

வெகு சில நடிகைகளே அம்மா கதாப்பாத்திரங்களில் சிறந்து விளங்கியும் அதே நேரம் பிரபலமாகவும் மாறியுள்ளார்கள். இதற்கு சமகால எடுத்துக்காட்டாக ஆஷா ஷரத் விளங்குகிறார். தாய்மை எப்போதும் கம்பீரத்தையும், உணரச்சி பிரவாகங்களையும் உள்ளடக்கியது, இதை ஒரு நடிகை செய்வதென்பது சுலபமான காரியம் அல்ல.

இருப்பினும், இந்த குணங்களை இயல்பிலேயே பெற்றவராக ஆஷா ஷரத் பாராட்டப்படுகிறார். உதாரணமாக Disney Plus Hotstar தளத்தில், ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள ‘அன்பறிவு’ (Anbarivu) திரைப்படத்தில்,அம்மா பாத்திரத்தில் அவரது அருமையான நடிப்பிற்காக, ஆஷா சரத் இப்போது பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறார்.

இது குறித்து கூறிய நடிகை ஆஷா ஷரத், “தமிழ் சினிமாவில் எனது நடிப்புக்கு கிடைத்து வரும் அங்கீகாரத்தைப் காண மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. த்ரிஷ்யம் படத்தொடர் எனது கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது, இயக்குனர் ஜீத்து ஜோசப் எனக்கு அற்புதமானதொரு பாத்திரத்தை வழங்கினார்.

அந்த கதாபாத்திரம் ஒரு வலுவான போலீஸாகவும், அதே நேரம் மனதளவில் உடைந்து போன தாயாக, குழப்பமான மனநிலையை பிரதிபலிக்கும் பாத்திரமாகவும் இருந்தது. அடிப்படையில் நான் பரதநாட்டிய நடனக் கலைஞர், கேரளாவில் நடக்கும் அனைத்து சர்வதேச விழாக்களிலும் நான் பங்கேற்று நடனமாடியுள்ளேன்.

என் நடனத்திறமை குறிப்பிடத்தக்க வகையில், நடிப்பின் நுணுக்கங்களை வெளிப்படுத்தவும், நடிகையாக எனது வாழ்க்கையை வடிவமைப்பதிலும், எனக்கு பேருதவியாக இருந்துள்ளது. என கூறினார். தற்போது, 46 வயதாகும் இவர் சுடிதார் சகிதமாக வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், நிஜமாவே உங்களுக்கு 46 வயசா..? நம்பவே முடியல.. என்று வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

மலையாளத்துறைகளில் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளி வந்த பிரம்மயுகம் திரைப்படம் தான் தற்போது டாக் ஆப் த …