Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அவ என்ன செய்றாளோ தெரியல.. கனகாவை நினைத்து உருக்கும் கங்கை அமரன்..

Tamil Cinema News

அவ என்ன செய்றாளோ தெரியல.. கனகாவை நினைத்து உருக்கும் கங்கை அமரன்..

நடிகை கனகா பழம்பெரும் நடிகையான நடிகை தேவிகாவின் மகள். வாரிசு நடிகையான நடிகை கனகா 1989 ஆம் ஆண்டு கரகாட்டகாரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.

இதையும் படிங்க: 80களில் உச்சம் பெற்ற நடிகர் சுதாகர்.. ஆந்திராவில் பிச்சைக்காரனாக சுற்ற யார் காரணம் தெரியுமா..?

இதை அடுத்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தமிழில் உச்சகட்ட நடிகர்களாக இருந்த ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக் போன்றவர்களோடு இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.


நடிகை கனகா..

இவர் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்து சேர்ந்தது. அதனை அடுத்து இவர் எதிர்காற்று, அதிசய பிறவி, கும்பக்கரை தங்கையா, தாலாட்டு கேக்குதம்மா, சாமுண்டி, சக்கரைதேவன், ஜல்லிக்கட்டு, காளை, பெரிய குடும்பம், சிம்ம ராசி, விரலுக்கேத்த வீக்கம் போன்ற படங்களில் நடித்து அசத்தியவர்.

என்பது காலகட்டங்களில் திரை உலகில் முன்னணி நடிகையாக ஜொலித்த இவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு திரை உலகை விட்டு விலகி என்ன ஆனார். எப்படி இருக்கிறார் என்று அறிந்து கொள்ளாத அளவிற்கு இவரது வாழ்க்கை அமைந்து விட்டது.

--Advertisement--

கனகாவை நினைத்து உருகும் கங்கை அமரன்..

கனகாவை தனது கரகாட்டக்காரன் படத்தில் அறிமுகப்படுத்தியது கங்கை அமரன் தான். கங்கை அமரன் மிகச்சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பட தயாரிப்பாளராகவும் பின்னணி பாடகராகவும் திகழ்ந்தவர்.


இந்நிலையில் மனிதர்கள் யாரும் வேண்டாம் என்று எண்ணக்கூடிய வகையில் நடிகை கனகா தனது வீட்டில் தனிமையில் யார் துணை இன்றியும் வாழ்ந்து வருகிறார். இதனை அடுத்து பலரும் இவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் எந்த பலனும் இல்லை.

இந்நிலையில் கங்கை அமரனும் நடிகை கனகாவோடு பேச வேண்டும். அவரை இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளிக்கொண்டு அனைவரோடும் சகஜமாக பழக வைக்க வேண்டும் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.

அவ என்ன செய்யறா தெரியல..

அந்த வகையில் கனகா என்ன செய்கிறாள் என்பதை அறிந்து கொள்வதற்காக கங்கை அமரன் அவருக்கு போன் செய்திருக்கிறார். முதலில் போனை எடுத்த கனகா யார் என்று கேட்டதை எடுத்து நான் தான் கங்கை அமரன் எனில் ஞாபகம் இல்லையா? என்று கேட்க எந்த பேச்சும் பேசாமல் போனை அப்படியே வைத்து விட்டார்.


இதனை அடுத்து இரண்டாவது முறையும் கங்கை அமரன் போன் செய்ய அந்த போனை எடுக்காமல் அப்படியே இருந்திருக்கிறார். கனகாவின் வீட்டிற்கு நேரில் சென்று சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் கங்கை அமரன் இருந்திருக்கிறார்.

தற்போது வீட்டில் தனிமையாக வாழ்ந்து வரும் கனகா எந்த மனிதர்களோடும் பேசுவதற்கோ அல்லது உறவாடுவோ விரும்பவில்லை என்று சொல்லலாம். இதனை அடுத்து இவர் வசிக்கும் வீட்டிற்கும் காம்பவுண்ட் கேட்டுக்கும் நெடுந்தூரம் உள்ளதால் காம்பவுண்ட் கேட்டை தட்டினால் கூட அவர் கதவை திறக்க மாட்டார் என்று கூறுகிறார்கள்.

வீட்டில் இருந்தாலும் பெட் ரூமுக்குள் இருக்கும் இவர் கதவை சாத்திக்கொண்டு தான் எல்லா வேலைகளையும் செய்து வருகிறார். மேலும் யாரையும் சந்திக்க விரும்பாமல் ஒரு விதமான விரத்தியில் வாழ்ந்து வரும் பெண்ணை எப்படியும் மாற்றிவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதற்கு சந்தர்ப்பம் அமையவில்லை.


இதையும் படிங்க: விசித்திர கோரிக்கை.. கோர்ட்டுக்கு வந்த விவாகரத்து.. ஐஸ்வர்யா கொடுத்த மனுவால் வெடித்த சர்ச்சை…!

கனகா நடித்து இருக்கின்ற படங்கள் ஒவ்வொன்றும் மிகச் சிறப்பாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அவர் நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்து இருந்தால் குறிப்பாக அவரது கண்கள் கரகாட்டக்காரன் படத்தில் மிக நேர்த்தியான முறையில் நடித்திருந்ததை பலரும் கூறியிருக்கிறார்கள்.

இப்படியாக கனகாவை நினைத்து அவரது வாழ்க்கையில் ஏதேனும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கங்கை மகன் உருகி வரும் விசயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top