ஏண்டா இப்படி ஒரு படத்துல நடிச்சோம்ன்னு தோனுச்சு.. அனிகா பேச்சை கேட்டீங்களா..?

வெகு காலங்களாக மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்து கொண்டிருந்தவர்தான் நடிகை அனிகா சுரேந்திரன்.

2019 ஆம் ஆண்டு வந்த மலையாள திரைப்படத்தில் முதன்முதலாக குழந்தை கதாபாத்திரமாக அறிமுகமானார் அனிகா.

அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு மொத்தமே ஆறு வயதுதான் ஆகி இருந்தது. 2014 வரை மலையாள சினிமாவில் நிறைய திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் அனிகா. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் வர துவங்கின.

தமிழில் எண்ட்ரி:

2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் முதன்முதலாக தமிழில் குழந்தை கதாபாத்திரமாக ஆறுமுகமானார் அனிகா. அந்த திரைப்படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வெளிவந்த விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார்  அனிகா சுரேந்திரன்.

---- Advertisement ----

தொடர்ந்து இரு திரைப்படங்களில் அஜித்திற்கு மகளாக நடித்திருந்ததால் அஜித்தின் ரசிகர்கள் சிலரே இவர் தான் அஜித்தின் நிஜமான மகள் என்று நினைத்து வந்தனர். இதனால் அனிகா கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடும் போதெல்லாம் அஜித்தின் மகளாக இருந்து கொண்டே இப்படி செய்யலாமா என்றெல்லாம் அவரை கேள்வி கேட்டு வந்தனர்.

கதாநாயகியாக ஆசை:

 2015 ஆம் ஆண்டு அவர் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்தார் 2019 ஆம் ஆண்டு விசுவாசம் திரைப்படத்தில் நடித்தார். இடைப்பட்ட நான்கு ஆண்டுகள் தான் வித்தியாசம் என்றாலும் கூட அதற்குள் மிகப் பெரிய மனுசியாக மாறிவிட்டார் அனிகா சுரேந்திரன்.

தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கு அதிகமாகவே இருந்து வந்தது இந்த நிலையில் புட்டபொமா என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் அனிகா சுரேந்திரன்.

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான பி.டி சார் திரைப்படத்தில் தற்சமயம் முக்கிய கதாபாத்திரத்தில் அனிகா சுரேந்திரன் நடித்திருக்கிறார். பிடி சார் திரைப்படத்திற்காக நிறைய யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வந்தார் அனிகா.

உண்மையை கூறிய அனிகா:

அப்படி பேட்டி அளிக்கும் போது ஒரு பேட்டியில் இந்த படத்தில் ஏன் நடித்தோம் என்று உங்களுக்கு தோன்றும் அளவிற்கு ஏதாவது ஒரு திரைப்படம் உங்கள் நடிப்பு அனுபவத்தில் இருக்கிறதா? என்று அனிகாவிடம் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த அனிகா அப்படியான திரைப்படம் இருக்கிறது. ஆனால் அதை நான் வெளியில் சொல்ல முடியாது. சொன்னால் என் வாழ்க்கை போய்விடும் ஆனால் அந்த படம் சமீபத்தில் தான் வெளியானது என்று அந்த திரைப்படம் குறித்து குறிப்பையும் கொடுத்திருக்கிறார் அனிகா.

---- Advertisement ----