வீட்டுக்கு ஏன் வர.. அங்கேயே போயிடுன்னு சித்தி விரட்டுனாங்க.. ரகசியம் உடைத்த அஞ்சலி..!

வீட்டுக்கு ஏன் வர.. அங்கேயே போயிடுன்னு சித்தி விரட்டுனாங்க.. ரகசியம் உடைத்த அஞ்சலி..!

ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை அஞ்சலி ஆரம்ப காலங்களில் விளம்பரங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தெலுங்கு விளம்பரத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு தெலுங்கு திரைப்படத்தில் சின்ன கேரக்டர் ரோலில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இதனை அடுத்து 2007 ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் ஆனந்தி என்ற கேரக்டர் ரோலை அற்புதமாக செய்ததன் மூலம் ஃபிலிம் ஃபேர் விருந்தினை பெற்றார்.

நடிகை அஞ்சலி..

இதனை அடுத்து 2010 ஆம் ஆண்டு அங்காடித் தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடித்ததின் மூலம் விருதினை பெற்ற இவர் ரசிகர்கள் விரும்பும் நடிகைகளில் ஒருவராக மாறினார்.


திரை உலகமே இவர் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சேராத இடத்தில் சேர்ந்து தனது திரை உலக வாழ்க்கைக்கு சறுக்கல்களை இவரே ஏற்படுத்திக் கொண்டார்.

சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவரைப் பற்றி அடிக்கடி கிசுகிசுகளும், வதந்திகளும் அதிக அளவு பரவியது. இதற்கு காரணம் இவர் தனக்கு வரும் படம் வாய்ப்புகளை எல்லாம் நழுவ விட்டு நடிகர் ஜெய்யின் கட்டுப்பாட்டில் இருந்ததோடு அவரை காதலித்து வந்ததாகவும் கிசுகிசுக்கள் எழுந்தது.

மேலும் இவரோடு திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவிங் டுகதர் முறையில் இருந்தார். மேலும் அதிக அளவு குடித்ததை அடுத்து இவர் காதலை பிரேக் அப் செய்துவிட்டு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.

சித்தி விரட்டுனாங்க..

ஆனால் ஆரம்பத்தில் இருந்த உடல் தோற்றம் சற்று மாறி உடல் பருமனாக காட்சி அளித்த இவருக்கு வாய்ப்புகள் கிடைப்பது சற்று கடினமான சமயத்தில் தீவிரமாக உடலை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஜிம்முக்கு சென்று ஃபிட்டாக மாற முடிவு செய்தார்.


மேலும் உடல் எடை அதிகரித்த காரணத்தால் பல்வேறு உடல்நிலை பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், எனவே உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் களம் இறங்கி இவர் நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த விஷயத்தை கூறி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்புக்குச் செல்லும் முன் அதிக உடற்பயிற்சி செய்து தான் செல்வதாகவும் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வருவதற்கு முன்பும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு தான் வீட்டுக்கு வருவேன் என கூறி இருக்கிறார்.

இந்நிலையில் இப்படித்தான் வருவதைப் பார்த்த இவருடைய சித்தி எதற்காக நீ வீட்டுக்கு வருகிறாய். ஜிம் பக்கத்திலேயே தங்கி விட்டு ஷூட்டிங் போயிட்டு மறுபடியும் வந்து தூங்க வேண்டியது தானே என்று விரட்டி இருக்கிறார்கள்.


அந்த அளவு கஷ்டப்பட்டு தான் உடற்பயிற்சியினை செய்து உடல் எடையை குறைத்திருக்கிறேன் என்ற விஷயத்தை வெளிப்படையாக தெரிவித்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்.

மேலும் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் கடுமையாக உடற்பயிற்சியை செய்து தான் அதிக அளவு உடல் எடையை குறைத்த ரகசியத்தை உடைத்து இருக்கிறார் நடிகை அஞ்சலி.

அடுத்து உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இவரை போல தீவிரமாக உடற்பயிற்சி செய்வதின் மூலம் கட்டாயம் உடல் எடையை குறைக்கலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

சமூக ஊடகங்களில் அடிக்கடி சிலரது குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகி டிரண்டிங் ஆகிறது. 10 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட …