இதனால் தான் ஜெய்-யை பிரிந்தார் நடிகை அஞ்சலி..! – ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

நடிகர் ஜெய் மற்றும் நடிகை அஞ்சலி இருவரும் காதலித்து வந்தார்கள் என்றும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள் என்றும் தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகின.

ஆனால் இருவருமே… நாங்கள் காதலில் இருக்கிறோம் என்றும் வெளியில் அறிவித்ததும் கிடையாது… நாங்கள் பிரிந்து விட்டோம் என்றும் வெளியில் அறிவித்ததும் கிடையாது.

அதே சமயம், இவர்கள் காதலிக்கிறார்கள் என்ற கிசுகிசு வளம் வந்து கொண்டிருந்தபோது ஒரே வீட்டில் வசித்துக்கொண்டு இருவரும் தோசை சுட்டு சாப்பிடும் புகைப்படங்கள்.. இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.. படப்பிடிப்பு தளத்தில் இயக்குனருக்கு ஜகா கொடுத்து விட்டு ஊர் சுற்றிய விஷயங்கள் இதெல்லாம் இணையத்தில் வைரலாகி கொண்டிருந்தது.

இது இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக இருந்தது. இந்நிலையில், பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜெய் மற்றும் அஞ்சலி எதனால் பிரிந்தார்கள் என்ற தகவலை பதிவிட்டு இருக்கிறார்.

நடிகை அஞ்சலி மற்றும் நடிகர் ஜெய் பிரிந்ததற்கு முக்கிய காரணம் நடிகர் ஜெய்யின் அதீத மதுப்பழக்கம் தான். அளவாக மது அருந்தி வந்த ஜெய் நாட்கள் செல்ல செல்ல அதற்கு அடிமையாகி இருக்கிறார்.

போதையில் கார் விபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு சென்று இருக்கிறார். இது குறித்த செய்திகள் கூட இணையத்தில் வெளியானது. அஞ்சலி எத்தனையோ முறை கேட்டும் நடிகர் ஜெய் இடம் இந்த போதைப் பழக்கத்தை குறைத்துக்கொள்ள வில்லை.

தன்னுடைய போதை பழக்கத்தை தொடர்ந்து இருக்கிறார் நடிகர் ஜெய். காதலித்துக் கொண்டிருக்கும் பொழுது திருவல்லிக்கேணியில் உள்ள கொட்டிவாக்கம் கடற்கரை ஓரத்தில் நடிகை அஞ்சலி மற்றும் ஜெய் இருவரும் ஒன்றாக பிளாட் ஒன்றை வாங்கி இருக்கிறார்கள்.

காதல் முறிவுக்கு பிறகு தன்னுடைய பிளாட்டை விற்பனை செய்து விட்டார் நடிகை அஞ்சலி. ஆனால், ஜெய் விற்பனை செய்யாமல் இருக்கிறார். அதில் ஜெய்யின் தந்தை குடியிருந்து வருவதாக கூறப்படுகிறது.

பொதுவாக சினிமா நடிகைகளாக இருக்கட்டும் சீரியல் நடிகைகளாக இருக்கட்டும் காதல் திருமணம் என்று வரும்பொழுது எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு பொறுமையாக இருப்பார்கள். உடனே பிரிந்து விட வேண்டும் என்ற முடிவெல்லாம் எடுக்க மாட்டார்கள்.

ஆனால், நடிகர் ஜெயிடம் பெரிதாக எந்த ஒரு மாற்றமும் தெரியாததால் இனிமேல் இவரிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று ஜெய்-யை பிரிந்து விட்டார் நடிகை அஞ்சலி என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …