Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress | நடிகைகள்

தன்னை பற்றி கமெண்ட் அடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் – ராஷ்மிகா மந்தனா கொடுத்த பதிலை பாருங்க..!

நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று எனக்கு நன்றாக புரிந்து விட்டது என தன்னைப் பற்றி கமெண்ட் அடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) -க்கு பதிலடி கொடுத்திருக்கும் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) பதில்கள் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராஷ்மிகா மந்தானா முன்னணி நடிகைகளாக ஜொலிக்க கூடிய தகுதி படைத்த நடிகைகள் இருவருமே தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி அதிகளவு ரசிகர்களை தனக்காக பெற்றிருப்பவர்கள்.

Aishwarya

Aishwarya

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ்  புஸ்பா தி ரைஸ் என்ற திரைப்படத்தில் ஸ்ரீவள்ளி என்ற கேரக்டர் குறித்து வெளியிட்ட தவறான கருத்துக்கு பதில் தருவது போல ராஷ்மிகா தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டு அதில் அந்த கேரக்டர் எப்படிப்பட்டது என்பதை தான் புரிந்து கொண்டதாக சூசகமாக தெரிவித்திருக்கிறார்.

இதனை அடுத்து அவர் வெளியிட்ட அறிக்கைக்கு பிறகு அதனுடைய உண்மை நிலையை புரிந்து கொண்டிருப்பதாக ராஷ்மிகா கூறியுள்ளதும் இதனால் இவர்களுக்கு இடையே எந்த விதமான பிணக்கமும் ஏற்படாது என்று தெரிவித்திருக்கிறார்.

Aishwarya

Aishwarya

அதுமட்டுமல்லாமல் ராஷ்மிகா செய்த கேரக்டர் தனக்கு மிகவும் சிறப்பாக பொருந்தும் அப்படி பொருந்தக்கூடிய வேலையில் நான் ராஸ்மிகாவை விட மிகவும் சிறப்பாக நடிக்கக்கூடிய வாய்ப்பு இருந்திருக்கும் என்றுதான் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருக்கிறார்.

மேலும் தான் தெலுங்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பதால்தான் ராஷ்மிகா நடித்த அந்த வேடத்தில் தான் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்பது போன்ற கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்ததாகவும் இதில் உள்நோக்கம் ஏதும் இல்லை என்று ஐஸ்வர்யா கூறியிருக்கிறார்.

Aishwarya

Aishwarya

அதுமட்டுமல்லாமல் ராஸ்மில்லாவின் நடிப்பை தான் இழிவுபடுத்தவில்லை என்றும் அவர் அவரது பங்குக்கூறிய வேலையை மிகச் சரியான முறையில் செய்திருக்கிறார் என்று அவர் தெரிவித்தார்.

இதனை அடுத்து இதற்கு பதில் தரும் வகையில் ராஷ்மிகா வெளியிட்டிருக்கும் கருத்து: “ஹாய் அன்பே.. இப்போதுதான் இதைப் பார்த்தேன்.. விஷயம் என்னவென்றால் – நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை நான் நன்றாகப் புரிந்துகொண்டேன், மேலும் எங்களை விளக்குவதற்கு எந்த காரணமும் இல்லை என்று நான் விரும்புகிறேன், உங்களுக்குத் தெரியும், எனக்கு மட்டுமே உங்கள் மீது அன்பும் மரியாதையும் இருக்கிறது.

Image

மேலும் இந்த சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்து விட்டதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Continue Reading

Top 5 Posts Today

To Top