யூடியூப்பில் பிரபல சினிமா விமர்சகராக வலம் வரும் ப்ளூ சட்டை மாறன், ’ஆண்டி இந்தியன்’ படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். ’ஆடுகளம்’ நரேன், ராதாரவி உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள். ஆதம் பாவா தயாரிப்பில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
சலசலப்புக்குரிய சினிமா விமர்சகராக அறியப்படும் ‘ப்ளூ சட்டை’ மாறன் எனும் இளமாறன் இயக்கியுள்ள முதல் சினிமா ‘ஆன்டி இண்டியன்’. பாட்ஷாவை யாரோ கொலை செய்து விடுகிறார்கள். பாட்ஷாவின் தாய், தந்தை இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பாட்ஷாவை அடக்கம் செய்வதில் சிக்கல் உருவாகிறது. அது தேர்தல் சமயமாகவும் உள்ளது.
பாட்ஷாவின் சவத்தை வைத்துக் கொண்டு மதவாதிகளும் அரசியல்வாதிகளும் செய்யும் ஆதாய அரசியலே இப்படத்தின் திரைக்கதை. தமிழ் சினிமாவில் நிறைய இளம் இயக்குனர் வருகிறார்கள், சிலர் வெற்றியடைகின்றனர்.ஒரு சில இயக்குனர்களின் படங்கள் வந்த வேகம் தெரியாமல் போய்விடும். படங்களை விமர்சனம் செய்வதன் மூலம் பிரபலம் அடைந்தவர் ப்ளூ சட்டை மாறன். இவர் ஆன்டி இண்டியன் என்ற படத்தை பல லட்சம் செலவில் எடுத்தார்.
அண்மையில் படம் வெளியாக மக்களிடம் சரியான வரவேற்பு பெறவில்லை, படம் ரிலீஸ் ஆகவும் பல பிரச்சனைகளை சந்தித்தது. வேற வழியே இல்லாமல், ப்ளூ சட்டை மாறன் படத்தின் தயாரிப்பாளர் என பலரும் பாஜக இந்த படத்தை எதிர்கிறது என்றெல்லாம் நாடகம் போட்டு பார்த்தார்கள். ஆனால், பாஜக தலைகள் இந்த படத்தை பற்றி வாயே திறக்க வில்லை.
கூடுதலாக, நடுநிலையான ரசிகர்கள் கூட.. எத்தனை படத்தை ரிவ்யூவ் பண்றேன் பேர்ல ரோஸ்ட் பண்ணி இருக்கீங்க.. தொரைக்கு பாஜக மூலமாக ப்ரமோஷன் கேக்குதோ.. பாஜக உங்களை கண்டுக்க கூட இல்ல.. படம் வொர்த்தே இல்ல.. என்று சகட்டு மேனிக்கு விளாசி தள்ளிவிட்டனர். இந்நிலையில், இந்த படம் வாஷ் அவுட் ஆகி விட்டதாக கூறப்படுகிறது.