இந்த வயசுலயும் இப்படி.. டைட்டான உடையில்.. இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அனு ஹாசன்..!

தமிழ் திரையுலகில் ரசிகர்களால் அறியப்பட்ட ஒரு நடிகையாக இருப்பவர் நடிகை அனு ஹாசன். திரைப்படம் மட்டுமில்லாமல் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தொகுத்து வழங்கிய பல நிகழ்ச்சிகள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று இருக்கின்றது.

பிரபல இயக்குனரும் நடிகருமான சுஹாசினியின் தங்கை தான் அனுஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1995 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திரா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அனுஹாசன்.

இந்த படத்தில் இடம்பெற்ற அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை என்ற பாடல் சினிமா ரசிகர்களை மட்டும் இல்லாமல் வெகுஜன மக்களையும் ஈர்த்தது. சுதந்திரத்தின் பெருமையை போற்றும் இந்த பாடல் தமிழகம் முழுவதும் பிரமாண்ட வெற்றி பெற்றது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் படித்திருக்கும் இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் அனு என்ற நிகழ்ச்சியில் தனக்கான ரசிகர் பட்டாளத்தை பெற்றார் என்று கூறலாம்.

பிரபலங்களை பேட்டி கண்டு ஒளிபரப்பு செய்யப்படும் இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மாடல் அழகி, இசைக்கலைஞர், பரதநாட்டிய கலைஞர், தற்காப்பு கலை நிபுணர் என பன்முக திறமை கொண்டவர் அணு ஹாசன்.

---- Advertisement ----

தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வரும் இவர் தற்பொழுது உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

மேலும் அந்த வீடியோக்களை புகைப்படங்களை வெளியிட்டு அதனை பார்க்கும் ரசிகர்களுக்கும் உடற்பயிற்சி மற்றும் யோகா மீதான ஆர்வத்தை தூண்டுகிறார். இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

---- Advertisement ----