நடிகை அனு மோல் ( Anu Mol ). கடந்த 2013-ம் ஆண்டு கதாசிரியர் ஜோதிநாத் எழுதிய ‘ஷட்டர்’ திரைப்படம் சக்கைப்போடு போட்டது. விலைமாது வேஷத்தில் நடித்த சஜிதா சிறந்த நடிகை விருது பெற்றார்.
இயக்குநர் ஏ.எல்.விஜய் தயாரிப்பு அவதாரம் எடுத்து “ஒருநாள் இரவில்” படத்தின் மூலம் எடிட்டிங்கில் பல விருதுகள் வென்ற ஆண்டனியை இயக்குநராக்கி இருக்கிறார்.
பொதுவாக வில்லனாக நடிக்கும் காலத்திலேயே சில காட்சிகளில் ஹீரோக்களை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடுவார் சத்யராஜ். ஒரு சிறிய ஷட்டர் கடைக்குள் நடக்கும் கதையில் பல நேரங்களில் சத்யராஜை பொறிக்குள் மாட்டிய எலியாய் அல்லாட வைத்து இருக்கிறார், விலைமாதுவாக நடித்த அனு மோல்.
உருட்டும் விழிகள், உதட்டுச் சுழிப்பு, கரன்சி கறப்பதில் கறார் என்று அப்படியே விலைமாது வேஷத்தை கண்முன் நிறுத்தினார் நடிகை அனு மோல்.
கல்யாண கோலத்தில் அனு மோல்
சில நாட்களுக்கு முன்பு, அனு மோலின் சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. அவர் திருமண பெண் போல் உடையணிந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அனுமோல் திருமண அலங்காரத்தில் இருப்பதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் சிலர் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். புகைப்படத்தை பார்த்ததும் பல்வேறு பகுதிகளில் இருந்து பலர் கேள்வி எழுப்பி வந்தனர். திருமணம் எப்போது? தற்போது இறுதியாக உண்மையை வெளிப்படுத்த அனு மோல் முன்வந்துள்ளார்.
அவர் திருமண உடையில் இருக்கும் புகைப்படத்துடன், இன்ஸ்டாகிராமில் ‘எனது திருமணம் அல்ல’ என்ற தலைப்பையும் ஹேண்ட்ஷேக் எமோஜியையும் பகிர்ந்துள்ளார். இது சௌமியாஷ்யம் என்ற ஒப்பனை கலைஞருக்காக செய்யப்பட்ட போட்டோஷூட் என்று அனு மோல் கூறுகிறார்.
எனக்காக சத்யராஜ் நகம் வெட்டினார்..
ஒரு நாள் இரவில் படத்தின் படப்பிடிப்பு அனுபவம் பற்றிய சுவாரஸ்யமான அனுபவங்கள் சிலவற்றையும் பகிர்ந்துள்ளார் அம்மணி.ஒருநாள் இரவில்” ஷுட்டிங் ஃபுல்லா தூசுபடிஞ்ச சின்ன ஷட்டர் போட்ட இடத்துலதான் நடந்துச்சு.
அப்போ நடிக்கிற டென்ஷன்ல ஒன்னும் பெரிசா தெரியலை. அப்புறம்தான் டஸ்ட் அலர்ஜி வந்து ரொம்பநாள் கஷ்டப்பட்டேன். சத்யராஜ்சார் எவ்ளோ பெரிய லெஜண்ட் அவர்கூட நடிக்கும்போது பயந்துகிட்டே நடிச்சேன்.
தன் கேரக்டரைவிட என்னோட வேஷம் பெரிசா பேசப்படணும்னு ரொம்ப ஃகேர் எடுத்துக்கிட்டார். முக்கியமா என் முகத்துல துணியால இறுக்கும் கட்டுற சீன்ல முகத்துல நகக்கீறல் ஏற்படும்ணு நடிக்கறதுக்கு முன்னாடி எல்லா நகத்தையும் சுத்தமா வெட்டிக்கிட்டு வந்த பிறகே நடிச்சார்.
நீச்சல் குளத்தில் பேட்டி..
இந்நிலையில், நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் நீந்தியபடியே ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார் அம்மணி. அந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர். இன்னும் சிலர், இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? என்று கலாய் கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.