மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனு சித்தாரா ( Anu Sithara ). இவர் நடிகர் மம்முட்டியுடன் இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்து விட்டார். திலீப்புக்கு ஜோடியாக சுபராத்திரி படத்தில் நடித்து வருகிறார்.இதை தொடர்ந்து கருணாகரன் நடிப்பில் வெளியான பொதுநலன் கருதி படத்தில் நடித்திருந்தார்.
அது தவிர தற்போது சீமான் மற்றும் ஆர்.கே. சுரேஷ் இருவரும் இணைந்து நடிக்கும் ‘அமீரா’ திரைப்படத்தில் அனு சித்தாரா இஸ்லாமிய பெண்ணாக நடித்தார்.இந்நிலையில் நடிகை அனு சித்தாரா கர்ப்பமாக இருப்பதாகவும், அதன் காரணமாக அவர் படங்களில் ஒப்பந்தமாவதைக் குறைத்துக் கொண்டார் என்று என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள அவர், ‘எனக்கு தற்போது 25 வயது தான் ஆகிறது.அதனால் குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் தற்போது இல்லை. இது வெறும் வதந்தி தான்’ என்று கூறியுள்ளார்.அனு சித்தாரா தன்னுடைய 18 வயதிலேயே கடந்த 2015 ஆம் ஆண்டு விஷ்ணு பிரசாத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நடிகையை ஃபேவரிட் நடிகையாக்கிக் கொண்டு, அவரை ட்ரெண்ட் செய்வது தமிழ் ரசிகர்களின் வழக்கம். லட்சுமி மேனன், ஸ்ரீ திவ்யா, மேகா ஆகாஷ் போன்ற நடிகைகள் இந்தப் பட்டியலில் அடங்குவர்.இவர்கள் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான துவக்க காலத்தில், அவர்களை சமூக வலைதளங்களில் பெருமளவு ட்ரெண்ட் செய்து தங்களைது ஆதரவை வெளிப்படுத்தினர் தமிழ் ரசிகர்கள்.
இந்நிலையில் தற்போதைய ட்ரெண்ட் நடிகை அனு சித்தாரா.ஆனால் அவர் நடித்த ஒரேயொரு தமிழ் படம் மட்டுமே வெளியாகியுள்ளது. அதிலும் அவர் பெரிதாக கவனிக்கப்படவில்லை. கடந்த 2013-ல் வெளியான, “பட்டாஸ் பாம்”, “ஒரு இந்தியன் ப்ராணக்கதா” போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அனு.
அதன் பிறகு ’திமிரு’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘வெறி’ என்ற படத்தை இயக்கினார், இயக்குநர் தருண் கோபி. இது தான் ஹீரோயினாக அனு சித்தாராவுக்கு முதல் படம். 2017-ல் இயக்கப்பட்ட இப்படம் பல சிக்கல்களால் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், என்னா ஷேப்பு.. செதுக்கிவச்ச சிலை.. செம்ம ஹாட்.. என்று வர்ணித்து வருகிறார்கள்.