அனுஷ்கா-வுக்கு திருமணம்..! – மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அனுஷ்கா கடந்த சில வருடங்களாக சினிமாவில் இருந்து ஓய்வில் இருக்கிறார் இதற்கு முக்கிய காரணம் அவருடைய உடல் எடை தான் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் நடிகை அனுஷ்காவின் திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. தமிழ் தெலுங்கு என பல வெற்றி படங்களில் நடித்திருக்கும் நடிகை அனுஷ்கா ஹீரோயின் சப்ஜெக்ட் படமான அருந்ததி என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் வெறும் 14 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் 70 கோடி ரூபாய் வசூல் செய்தது. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பேய் மற்றும் திகில் படங்கள் அதிகளவில் வரத் தொடங்கியது. தற்போது தான் அந்த டிரெண்ட் அடங்கியிருக்கின்றது. அந்தளவிற்கு ஒரு பெரிய தாக்கத்தை இந்த திரைப்படம் ஏற்படுத்தியது.

இந்த படத்தில் நடிகை அனுஷ்காவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து விஜய் அஜீத் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நடிகை அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்த படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை தாறுமாறாக கூட்டினார் நடிகை அனுஷ்கா. ஆனால் அந்த உடல் எடையைக் குறைக்க முடியாமல் சினிமாவை விட்டு விலகும் அளவிற்கு சென்றுவிட்டது. அவ்வப்போது உடல் எடையை குறைத்து சில படங்களில் நடித்தாலும் மீண்டும் அவருடைய உடல் எடை கூடி விடுவதால் மிகவும் சிரமப்படுகிறார் நடிகை அனுஷ்கா.

தொடர்ந்து உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வரும் நடிகை அனுஷ்கா தற்பொழுது துபாய்க்கு தன்னுடைய யோகா குருவை சந்திக்க சென்றிருக்கிறார். அங்கே சில மாதங்கள் தங்கியிருந்து யோக கலைகளை கற்று வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பிரபல நகைக்கடை தொழிலதிபர் ஒருவரை நடிகை அனுஷ்கா திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் அக்கட தேசத்து ஊடகங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.

இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. காரணம் நடிகை அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இருவரும் காதலித்து வருவதாகவும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின. அதற்கேற்றாற்போல் நடிகர் பிரபாஸ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கின்றார்.

எனவே அனுஷ்காவை தான் அவர் திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பிரபல நகைக்கடை அதிபர் ஒருவரை நடிகை அனுஷ்கா திருமணம் செய்துகொள்ள இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் தெரிகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …