ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. தமிழ் தெலுங்கு என இரண்டு சினிமாவிலும் ஒரே நேரத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.
இவருடைய திரை வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது அருந்ததி என்ற திரைப்படம் வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 70 கோடியை வசூல் செய்து இமாலய சாதனை படைத்தது.
ஒரே படத்தின் மூலம் பல கோடிகளை சம்பாதித்தார் இந்த படத்தின் தயாரிப்பாளர். படத்திற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் உடல் இளைத்து அல்லது உடல் எடையை கூட்டியும் நடிக்க கூடிய திறன் வாய்ந்த நடிகை அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி என்ற ஒரு படத்தில் நடிப்பதற்காக தன்னுடைய உடல் எடையை கூட்டி ரசிகர்களை அதிர வைத்தார்.
இந்த படம் முடிந்த பிறகு இவருடைய உடல் எடையை குறைக்க படாத பாடுபட்டு வருகிறார். உடற்பயிற்சி செய்வது மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது என எதையெதையோ செய்து இவருடைய உடல் எடை குறைந்தபாடில்லை.
இந்நிலையில் கேரளாவுக்குச் சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற்று தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறினார் அனுஷ்கா. ஆனால், அவருடைய அந்த தோற்றம் அவருக்கு நிலைக்கவில்லை.
மீண்டும் உடல் எடை கூடிவிட்டது இந்நிலையில் நடிகை அனுஷ்கா வீட்டில் அமர்ந்து இருக்கும் படி இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் குண்டா இருந்தாலும் கும்முனு இருக்கீங்க.. என்று வர்ணித்து வருகின்றனர். 40 வயதை கடந்த நடிகை அனுஷ்காவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.