இரவு நேரத்தில் Limit ஓட அதை பண்ணலாம்.. தப்பு இல்ல… – நடிகை அனுயா பேச்சு..!

Anuya Y Bhagwat : நடிகை அனுயா பகவத் இரவு நேரத்தில் மது அருந்துவது குறித்து தன்னுடைய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

நடிகை அனுயா பகவத் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.

அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை அனுயா பகவத் உடல் எடை கூடி குண்டாக்கி போனார்.

பட வாய்ப்புகள் வருவது நின்று போனது., தொடர்ந்து தொலைக்காட்சி சீரியல்கள் பிக் பாஸ் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கல்லாகட்டி வந்த அனுயா பகவத் தற்பொழுது மராத்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் மது அருந்துவது குறித்து உங்களுடைய கருத்து என்ன..? என்று கேள்விக்கு பதில் கொடுத்து இருக்கிறார்.

அவர் கூறியதாவது, மது அருந்துவது தவறு கிடையாது. குறிப்பாக மதுவை இரவு நேரத்தில் அருந்துவது சரியாக இருக்கும் ஏனென்றால் பகல் நேரத்தில் மது அருந்தினால் அவர்களுடைய வேலை கெட்டு விடும்.

வேலை முடித்த பிறகு இரவு நேரங்களில் மது அருந்தலாம். அதிலும் ஒரு லிமிட்டோடு இருக்க வேண்டும். லிமிட் இல்லாமல் மது அருந்தினால் நீங்கள் அதிகம் ஆவேசப்படுவீர்கள். உங்கள் கோபத்தை தூண்டக்கூடிய விஷயங்கள் உங்களுக்கு ஞாபகம் வர வாய்ப்பு இருக்கிறது.

இதனால் மற்றவர்களுடன் சண்டை போடுவீர்கள். சிறு விஷயம் கூட உங்களை உச்சகட்ட கோபத்திற்கு ஆளாகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அது உங்களுக்கும் நல்லது கிடையாது உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது கிடையாது. இன்று நடக்கக்கூடிய பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மது போதையில் இருப்பவர்களால் தான் ஏற்படுகிறது.

போதை தெளிந்த பின்பு நானா இப்படியெல்லாம் செய்தேன் என யோசித்து ஒரு புண்ணியமும் இல்லை. எனவே மது அருந்தும் போது ஒரு லிமிட் தெரிந்து அருந்த வேண்டும். இரவு நேரத்தில் மது அருந்துவது சரியானது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதையும் நான் சரி என்று கூற மாட்டேன் என பேசி இருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …