வாவ்.. சூரரை போற்று அபர்ணா பாலமுரளி-யா இது..? – இணையத்தை கலக்கும் நச் போட்டோஸ்..!

அபர்ணா பாலமுரளி (Aparna Balamurali) சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர். நல்ல நடிகையாக தன்னை அடையாளப்படுத்தும் ஒரு சிறந்த நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி இருந்தார். இந்த படம் ஒன்றே, அவர் நல்ல நடிகை என்பதற்கு போதுமானது. மலையாளம், தமிழ் படங்களில் வளர்ந்து வரும் நடிகையாக, நடித்து வருகிறார். இவர், பின்னணி பாடகி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் ‘மகேசிண்ட பிரதிகாரம்’, என்ற படத்தில், 2016ம் ஆண்டில் ‘ஜிம்ஸி’ என்ற கேரக்டரில் அபர்ணா அறிமுகமானார். அடுத்து, 2017 ல் வெளியான சண்டே ஹாலிடே படத்தில் அனு என்ற கேரக்டரில் நடித்தார். இந்த இரண்டு படங்களிலும் ஜிம்ஸி, அனு கேரக்டர்களில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால், இவர் ரசிகர்களின் மத்தியில் மிக பிரபலமானார்.

Aparna Balamurali

அபர்ணா பாலமுரளியின் சொந்த ஊர், கேரளா மாநிலம் திருச்சூர். இவர் பிறந்தது இங்குதான். இவரது பெற்றோர் பாலமுரளி – சோபா அபர்ணாவின் தந்தை, பாலமுரளி இசை இயக்குநராக, பல படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். வழக்கறிஞராக உள்ள அபர்ணாவனின் அம்மா, மலையாள படங்களில் பாடி இருக்கிறார்.

நடிப்பு மட்டுமின்றி இந்திய பாரம்பரிய இசை கற்றவர் அபர்ணா பாலமுரளி. அத்துடன் பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி நடனம் என முறைப்படி பயிற்சி பெற்றவர். பாலக்காட்டில் உள்ள பிரபலமான கட்டிடக்கலை நிறுவனத்தில் படித்தவர் இவர்.

Aparna Balamurali

கடந்த 1995 ம் ஆண்டில் பிறந்த அபர்ணாவுக்கு, 28 வயதுகள் ஆகிறது. சமீபத்தில் கேரளாவில் கல்லூரி வளாகத்தில் நடந்த படவிழா ஒன்றில், அங்கிருந்த மாணவர், மேடையேறி அபர்ணா பாலமுரளியில் தோளில் கைபோட முயன்றது, வைரலாகி பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது.

---- Advertisement ----

தமிழில், அபர்ணா பாலமுரளி நித்தம் ஒருவானம், வீட்ல விசேஷம், தீதும் நன்றும், சூரைப் போற்று, சர்வம் தாளமயம், 8 தோட்டாக்கள் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

Aparna Balamurali

இதில் சில படங்கள் மிகச்சிறந்த படங்களாக, அபர்ணா பாலமுரளியின் நடிப்பை, கேரக்டரை மிக கவனித்து ரசிக்கும் படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு கிடைத்த கேரக்டரை முழுமையாக உள்வாங்கி, சிறந்த நடிப்பாற்றலில் அதை வெளிப்படுத்தி, ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறார் அபர்ணா.

Aparna Balamurali

குறிப்பாக, ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடித்த வீட்ல விசேஷம் படத்தில், மெட்ரிக் பள்ளி நடத்தும் அபர்ணா பாலமுரளி, தன் அம்மாவுக்காக பேசும் காட்சியிலும், வயதான காலத்தில், ஊர்வசி கர்ப்பமாக இருக்கிறார் என வருத்தப்படும் அவரது மகன் ஆர்ஜே பாலாஜியிடம் பேசும் காட்சியிலும் நல்ல நடிப்புத்திறனை வெளிப்படுத்தி இருப்பார்.

ஆர்ஜே பாலாஜியை அவரது வீட்டுக்கு சென்று பார்க்கும் காட்சியிலும் நன்றாக நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சூரரைப்போற்று படத்திலும் சூர்யாவின் மனைவியாக பல இடங்களில் தனது முத்திரை நடிப்பை தந்திருப்பார் அபர்ணா.

Aparna Balamurali

சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் அவர், அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். ரசிகர்களும் அதற்கு லைக்குகளை அள்ளித் தருகின்றனர்.

லேட்டஸ்ட் ஆக வந்துள்ள அபர்ணா புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

---- Advertisement ----