இப்படி இருக்கும் ஆண்களை தான் பெண்களுக்கு பிடிக்கும்..! - வெளிப்படையாக கூறிய அபர்ணா பாலமுரளி..!

இப்படி இருக்கும் ஆண்களை தான் பெண்களுக்கு பிடிக்கும்..! – வெளிப்படையாக கூறிய அபர்ணா பாலமுரளி..!

கேரளத்து பைங்கிளி யான அபர்ணா பாலமுரளி படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். மிகவும் சிறப்பான கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து சீரிய முறையில் நடித்து வரும் அபர்ணா பாலமுரளி குடும்பமே கலை குடும்பம் ஆகும்.

தமிழைப் பொறுத்தவரை இவர் எட்டு தோட்டாக்கள் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் இவர் தமிழில் நடித்த சர்வம் தாளமயம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதனை அடுத்து இவர் இயக்குனர் சுதா கோங்குரா இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்த சூரரைப் போற்று படம் ரசிகர்களின் மத்தியில் இவரை கொண்டு சேர்த்தது.

அது மட்டும் அல்லாமல் இந்தப் படத்தில் இவர் செய்த பொம்மி கேரக்டர் பலரது பாராட்டுதல்களை பெற்றது. பொம்மி போன்ற மனைவி தான் வேண்டும் என்று வேண்டாத ஆள்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அந்த கேரக்டரை எதார்த்தமாக செய்திருந்தார்.

இதனை அடுத்து தமிழில் தீதும் நன்றும், வீட்டில விசேஷம், நித்தம் ஒரு வானம் போன்ற படங்களில் நடித்த இவர் தனுஷின் ஐம்பதாவது படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படி இருக்கும் ஆண்களை தான் பெண்களுக்கு பிடிக்கும் என்று அபர்ணா பால முரளி கூறி இருப்பது ரசிகர்களின் மத்தியில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாகவே பெண்களிடம் கண்ணியமாக அதே நேரத்தில் எல்லை தாண்டாமல் அவர்களின் எல்லையை அறிந்து செயல்படும் ஆண்களை தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் என்ற கருத்தை சூப்பராக கூறி இருக்கிறார்.

அத்தோடு விளையாட்டாக இருந்தாலும் சரி, பெண்களை கவருவதற்காக ஆண்கள் செய்யக்கூடிய முயற்சியாக இருந்தாலும் சரி, எந்த வகையிலும் ஒரு குறிப்பிட்ட பெண்ணின் வரம்பை தாண்டாத அளவு நடந்து கொள்ளும் கண்ணியமான ஆண்களை தான் பெண்களுக்கு பிடிக்கும்.

மேலும் ஒரு ஆண் எந்த நேரத்தில் தன்னுடைய வரம்பை தாண்டி உள்ளே வருகிறானோ, அப்போதே அந்தப் பெண்ணுக்கு அந்த ஆணை பிடிக்காமல் போய்விடும்.

அது வேலை செய்யக்கூடிய இடமாக இருந்தாலும் சரி, காதலனாக இருந்தாலும் சரி, நண்பனாக இருந்தாலும் சரி, பெண்களிடம் எப்போதும் அவர்கள் எல்லை அறிந்து செயல்படும் ஆண்களே பேராண்மை கொண்டவர்கள் என்று நடிகை அபர்ணா பாலமுரளி தெரிவித்திருக்கும் கருத்து தற்போது பேசும் பொருளாகிவிட்டது.