உருவத்தில் என்ன இருக்கு? திறமை இருந்தால் எதிலும் ஜெய்கலாம் நடிகை அபர்ணா பாலமுரளியின் ஆவேச பேச்சு!

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று படத்தின் மூலம் மக்களின் மனதில் பிரபலமானவர் அபர்ணா பாலமுரளி இவருக்கு எந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை க்கான  தேசிய விருது கிடைத்துள்ளது.

 இந்தப் படத்தை பெண் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கி இருந்தது  யாருக்குமே தெரியும். மேலும் அபர்ணா தமிழில் 8 தோட்டாக்கள் தீதும் நன்றும் சர்வம்  தாளமயம் வீட்டில் விசேஷம் போன்ற படங்களில் நடித்ததோடு தற்போது நித்தம் ஒரு வானத்தில் நடித்து வருகிறார்.

இளமை, அழகு, நிறம் இவை இருந்தால் மட்டும் தான் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதெல்லாம் ஒரு காலம். தற்போது எப்படி இருந்தாலும் திறமை இருந்தால் சாதித்துவிடலாம் என்ற உணர்வோடுதான்  ஒவ்வொருவரும் திரைத்துறையை நோக்கி வருகிறார்கள்.

மேலும் சினிமா என்றாலே ஒல்லியாக வெள்ளை நிறத்துடன் அழகாக இருக்க கூடிய நடிகைகள் மட்டும் தான் ஜெயிக்க முடியும் என்ற இந்த கால கட்டத்தை தாண்டி பல கருப்பு நிற நடிகர்கள், நடிகைகள் சாதித்து இருக்கிறார்கள் .இது உருவ கேலி செய்தவர்களும் சவுக்கடி கொடுக்கும் வகையில் அவர்களது நடிப்பில் திறமையை காட்டி பல விருதுகளும் பெற்றிருக்கிறார்கள்.

அபர்ணாவை பற்றி அவர் கூறும் போது இவர் ஆரம்ப காலத்தில் சற்று குண்டாக இருந்து வருந்தி இருக்கிறாராம். பல விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். ஆனால் உடல் எடை அதிகமாக இருப்பதும், குறைவாக இருப்பதும் அவரவர் திறமையை  குறைத்து விடாது என  கூறியதோடு அதற்கு உதாரணமாக நடிகர் தனுஷ் மற்றும் விஜய சேதுபதியை எடுத்துக்காட்டாக கூறியிருக்கிறார். ஒல்லியாக இருக்கக்கூடிய தனுசும் குண்டாக இருக்கக்கூடிய விஜய்சேதுபதியும் திரையுலகிலிருந்து சாதிக்கவில்லையா என்பது போன்ற கேள்வியை அவர் விடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

---- Advertisement ----

மேலும் இனி யாரும் உருவ கேலியில் ஈடுபடுவதற்கு யோசிக்கவேண்டும். அந்த வகையில் அபர்ணா கொடுத்திருக்கக் கூடிய சவுக்கடியான பதிலடி மிகவும் தரமானதாக இருக்கிறது. இதை உணர்ந்து அனைவரும் செயல்பட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

---- Advertisement ----